திருச்சி 23.05.2016
சபரிநாதன் 9443086297
தமிழக அரசின் சார்பில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு அவர்களின் 1341-வது பிறந்தநாள் விழா - மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
---------------------------
முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு 1341-வது பிறந்தநாள் விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் .பழனிசாமி இன்று (23.05.2016) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நாட்டின் விடுதலைக்காகவும் சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் அவர்களது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் 23-ம் தேதி கொண்டாடப்பட்டு
வருகிறது. அதன்படி இன்று
(23.05.2016) நடைபெற்ற அரசு விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையிலுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார்வட்டாட்சியர் செல்வமதி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொது செயலாளர் பாஸ்கரன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பத்மநாபன்மாநகராட்சி கல்வி குழுத்தலைவர் பூவேந்திரன் முத்தரையர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்