10ம் வகுப்பு தேர்வு முடிவுதுறையூர் பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இட ம்
திருச்சி, மே 25-
திருச்சி மாவட்டத்தில், 424 பள்ளிகளை சேர்ந்த, 39,649 மாணவ, மாணவிகள், 10ம் வகுப்பு தேர்வெழுதினர்.
திருச்சி மாவட்டத்தில், 424 பள்ளிகளை சேர்ந்த, 39,649 மாணவ, மாணவிகள், 10ம் வகுப்பு தேர்வெழுதினர்.
இன்று வெளியான தேர்வுகள் முடிவுகளில், 38,033 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 95.92%. கடந்தாண்டு, 97.62% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், நடப்பாண்டு 1.7% சரிவடைந்துள்ளது.
ஆங்கிலபாடத்தில் 2 மாணவர்கள்,
கணித பாடத்தில் 558 மாணவர்கள்,
அறிவியல் பாடத்தில் 684 மாணவர்கள்,
சமூக அறிவியல் பாடத்தில் 1285 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கணித பாடத்தில் 558 மாணவர்கள்,
அறிவியல் பாடத்தில் 684 மாணவர்கள்,
சமூக அறிவியல் பாடத்தில் 1285 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி துறையூர் ஜமீன்தார் பள்ளி மாணவி திவ்யஸ்ரீ 498
மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடமும், திருச்சி மாவட்ட அளவில்
முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், துறையூர் சவுடாம்பிகா பள்ளியை சேர்ந்த அபிநயா, நவிதா
ஸ்ரீ, ஸ்ரீநிதி, துறையூர் விமலா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த காமேஸ்வரி,
பிரித்திகா, எஸ்விவி பள்ளி மாணவி லோசினி ஆகிய ஆறு பேர் 497 மதிப்பெண்
பெற்று மாநில அளவில் 3ம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும்
பெற்றுள்ளனர்.
அடுத்தபடியாக, 496 மதிப்பெண்களை பெற்று 14 பேர் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.