Jul 16, 2015

உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிääஅவர்கள் தகவல்


உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டினால்                கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர்                                 பழனிசாமிääஅவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் திட மற்றும் திரவக்கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிää அவர்கள் இன்று (16.07.2015) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

உய்யகொண்டான் வாய்க்காலானது பெட்டவாய்த்தலையிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக சுமார் 71கி.மீ. நீளத்திற்கு செல்கிறது. இவ்வாய்க்கால் புத்தூர் ஆறுகண்;ää திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளின் வழியாக கடந்து வாழவந்தான்கோட்டை கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றடைகிறது. பின்ää உய்யக்கொண்டான் வாய்க்காலனது நீட்டிப்பு வாய்க்காலாக தஞ்சாவூர் மாவட்டம்ää பூதலூர் வட்டம்ää சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது. இப்பாசன வாய்க்கால் மூலம் 32742 நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இவ்வாய்க்கால் புத்தூர் ஆறுகண் தொட்டிப்பாலத்திலிருந்து மாநகராட்சி மையப்பகுதியில் 6 கி.மீ. வரை செல்கிறது.  இப்பகுதியில் கரையோர குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவுநீரும்  குப்பைகள் மற்றும் கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்படுவதால்  பாசன நீர் தேக்கம் ஏற்பட்டுää மண் மேடிட்டும்ää ஆகாயத்தாமரை செடிகள் அடர்த்தியாகவும்ää அபிரிமிதமாகவும் வளர்ந்து சுகாதாரமற்;ற நிலை ஏற்படுகிறது. 

உய்யக்கொண்டான் ஆறு மாசுபடுவதை தடுக்கவும் அதனை பாதுகாக்கவும் மாநகராட்சிஇ பொதுப்பணித்துறை (ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம்)இ மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இ வருவாய்த்துறைஇ சுகாதாரத்துறை மற்றும் சுற்றுச் சூழல்த்துறை தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு இக்குழுவினர்களால்  ஒவ்வொரு வாரமும் உய்யக்கொண்டான்  வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

இன்று (16.07.2015) ஆறுகண் பாலத்திலிருந்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ள அண்டகொண்டான் நடைபாலம் வரையும் தொடர்ந்து பணி மேற்கொள்ளப்பட உள்ள பாலக்கரை ரயில்வே பாலத்திலிருந்து பெரியார் பாலம் வரை 1 கி.மீ. தூரத்திற்கு பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : 

மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலில் 6 கி.மீ தூரத்திற்கு          ரூ.1.96 கோடி மதிப்பில் தூர்வாரி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் பாலக்கரையிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்கு ரூ.9.4 கோடி மதிப்பில் வாய்க்காலின் இருபுறமும் சுற்றுச்சுவர் மற்றும் தரைதள பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  அண்ணாநகர் இணைப்பு மேம்பாலம் முதல் எம்.ஜி.ஆர்.சிலை வரை 630 மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சி மூலம் ரூ. 85 இலட்சம் செலவில் நடைபாதைää தடுப்பு வேலிää மிதிவண்டி செல்வதற்கான பாதைää பொதுமக்கள் அமர்வதற்கான பலகை மற்றும் மரக்கன்றுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வாய்க்காலில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவதை தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

மாநகரப் பகுதியில் 266 வீடுகளிலிருந்து கழிவுகள் நேரடியாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலப்பது கண்டறியப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் 71 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.  29 வீடுகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 166 வீடுகளுக்கு  இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை  செய்யப்பட்டுள்ளது. மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி மூலம் முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்படும்.  இரண்டாம் கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாண்டியராஜன் நகரப் பொறியாளர்  நாகேஷ் செயற்பொறியளர் அமுதவல் உதவி செயற்பொறியாளர் லெட்சுமணமூர்த்தி  உதவி செயற்பொறியாளர் (ஆற்றுப்பாதுகாப்பு) கண்ணன் உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சேகரன்ää நீலமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.