Jul 5, 2015

திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் 4253 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் வழங்கினார்


திருச்சி 05.07.2015                          சபரிநாதன் 9443086297

திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் 4253 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி  வழங்கினார்
     திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் 4253 குடும்பங்களுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கும் விழா எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர்                 பழனிசாமி அவர்கள் தலைமையில் அரசுத் தலைமைக் கொறடா மனோகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (05.07.2015) நடைபெற்றது.
இவ்விழாவில் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்வசிறி மிக்ஸிää கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் 10னாட்சி  தெரிவித்தது:-
     மக்களின் முதல்வர் அவர்கள் ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் விரைவாக வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் இல்லத்தரசிகளின் இன்னலை போக்க மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த முதல்வரும் செயல்படுத்தாத சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4925 இல்லத்தரசிகளுக்கு ரூ. 207 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 4253 இல்லத்தரசிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் பரஞ்ஜோதி .வளர்மதி துணை மேயர் சீனிவாசன் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் கணேசசேகரன் கோட்டத்தலைவர் மனோகரன் மாமன்ற உறுப்பினர் ராஜா சகாதேவ பாண்டியன் வட்டாட்சியர்  சிராஜுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்