பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இண்டியா மற்றும் தினமலர் ஏடுகளுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி தமிழக முதல்வரை விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி மீது அடுத்தடுத்து இரு அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று 3வது அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.