Sep 16, 2014

ஈரோடு மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்











ஈரோடு மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பெருந்துறை

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கொண்டாடப்பட்டது.

பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க. வக்கீல் திருமலை, பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, கிளை செயலாளர் சுதா சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் டி.சி.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி பால்சின்னசாமி, ஈஸ்வரன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.பி.நடராஜ், இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரூர் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. வினர் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன் தலைமையில் பவானி ரோடு சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஜெகதீஸ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித்குமார், பேரூராட்சி தலைவர்கள் ஜானகி, சரஸ்வதி, துணைத்தலைவர் மோகன்குமார், ஊராட்சி தலைவர்கள் சோமசுந்தரம், மோகன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பவானி

பவானி நகர அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா பவானி அந்தியூர் பிரிவில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில்குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முத்துச்சாமி, நகராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் மயிலம்பாடி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பவானி நகர தி.மு.க. சார்பில், தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமையில் அந்தியூர் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை செயலாளர் பாவை ராஜா, கவுன்சிலர்கள் சரவணன், சரவணக்குமார், முருகேஷ் மற்றும் நகர துணை செயலாளர்கள் தமிழரசி, சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பழைய தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.பி.சேகர் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி வைத்து அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.கந்தசாமி, பேரூர் தி.மு.க. செயலாளர் பி.விஜயகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம்.அறிவானந்தம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இம்ரான், ஒன்றிய பிரதிநிதி தங்கராசு, மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பேரூர் மற்றும் ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அவல்பூந்துறை பேரூர் அ.தி.மு.க. சார்பில் அவல்பூந்துறை நால்ரோட்டில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் ஆர்.பி. கதிர்வேல் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பூவைதமிழன், அவல்பூந்துறை பேரூராட்சி துணைத்தலைவர் பொன்னுசாமி, வார்டு கவுன்சிலர் தினகரன், வார்டு செயலாளர்கள் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

கொடுமுடி

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கொடுமுடி புதிய பஸ்நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரின் உருவப்படத்துக்கு கொடுமுடி மகுடேசுவரர் கோவில் முன்னாள் தக்கார் கே.எஸ்.சுப்பிரமணியம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கொடுமுடி ஒன்றிய செயலாளர் புதூர்கலைமணி, ஒன்றியக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன், பேரூராட்சி உறுப்பினர் வெண்ணிலாபாலு மற்றும் மயில்ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபி

அண்ணா பிறந்தநாளையொட்டி கோபி எம்.பி. அலுவலகத்தில் கோபி நகர செயலாளர் சையத்புடான்சா அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திருப்பூர் சத்தியபாமாவாசு எம்.பி., மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.