Sep 15, 2014

கோவையில் ஜெயலலிதா பிரச்சாரம்: பா.ஜனதா மீது குற்றச்சாட்டு

கோவையில் ஜெயலலிதா பிரச்சாரம்: பா.ஜனதா மீது குற்றச்சாட்டு

கோவையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மேயர் வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:- 

தமிழக உரிமையை நிலைநாட்டுவதில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட அ.தி.மு.க. அக்கறை எடுத்து வருகிறது. 

உட்கட்சி பூசல் காரணமாகத்தான் பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். உட்கட்சி பூசலை மறைக்க அ.தி.மு.க. மீது பழி போடுகிறார்கள். 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய மின்திட்டங்களால் டிசம்பர் மாதத்திற்குள் கூடுதலாக 2430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். புதிய மின் திட்டங்கள் மூலம் வரும் ஆண்டுகளில் 5723 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தமிழகத்தில் மின்தடை சரி செய்யப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில் 110.65 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மரியாதை



சென்னை.செப்.16 - அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி நேற்று கோவையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவையில் முதல்வர் ஜெயலலிதா கோவை மாநகராட்சி அண்ணா தி.மு.க. மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வ.உ.சி. மைமானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் ஜெயலலிதா மாலை 4.45 மணிக்கு அவினாசி ரோடு எல்.ஐ.சி. கார்னரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அதிமுக தலைமயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா,
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் 18.9.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று பிற்பகல் (15.9.2014 - திங்கட் கிழமை), கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார்கள்.
பின்னர், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழியில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், அவினாசி ரோடு, டுஐஊ கார்னரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி, ""பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாள் விழா"" சிறப்பு மலரை வெளியிட்டார்கள். முதல் பிரதியை கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்,பி, வேலுமணி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்,
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இவ்வாறு அதிமுக தலைமயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது