Jun 6, 2016

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள அஇஅதிமுக பிரமுகர் மற்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் கடைசேதப்படுத்திய கவரிங் கடை மற்றும் நகைக்கடைதொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ;


திருச்சியில் பிரபல கல்யாணி கவரிங்நகைக்கடை நடத்திவரும் திருமூர்த்தி மற்றும் உமாநாத் சகோதரர்கள் இவர்களுக்கும் அஇஅதிமுக பிரமுகரான சோமு என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்மந்தமாக சிவில் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது சில மாதங்கள் முன்பு அஇஅதிமுக பிரமூகர் சோமுவை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இக்பால் கொலைசெய்யப்போவதாக மிரட்டி கடையை காலி செய்ய கூறியுள்ளார் அதன் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று காலையில் அஇஅதிமுக பிரமூகரை தள்ளிவிட்டு கொலைமிரட்டல் விடுத்து காடையை காலிசெய்துள்ளனர் பின்னர் கடையை தரை மட்டாமாக சேதப்படுத்தியுள்ளனர் கடையில் இருந்த முதல் ஜெயலலிதா படத்தையும் குறிப்பாக சேதப்படுத்தியதால் அஇஅதிமுகாவினர் ஏராமானோர் காவல் நிலையத்தில் குவிந்தனர் அதனால் திருச்சியில் பரப்பரப்பு காணப்பட்டது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சீதராமனிடம் மனு கொடுக்கப்பட்டது

பேட்டி சோமு என்ற சோமசுந்தரம்

May 25, 2016

திருச்சி, மே 25-10ம் வகுப்பு தேர்வு முடிவு துறையூர் பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இட ம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுதுறையூர் பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இட ம்
திருச்சி, மே 25-
திருச்சி மாவட்டத்தில், 424 பள்ளிகளை சேர்ந்த, 39,649 மாணவ, மாணவிகள், 10ம் வகுப்பு தேர்வெழுதினர்.
இன்று வெளியான தேர்வுகள் முடிவுகளில், 38,033 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 95.92%. கடந்தாண்டு, 97.62% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், நடப்பாண்டு 1.7% சரிவடைந்துள்ளது.
ஆங்கிலபாடத்தில் 2 மாணவர்கள்,
கணித பாடத்தில் 558 மாணவர்கள்,
அறிவியல் பாடத்தில் 684 மாணவர்கள்,
சமூக அறிவியல் பாடத்தில் 1285 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி துறையூர் ஜமீன்தார் பள்ளி மாணவி திவ்யஸ்ரீ 498 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடமும், திருச்சி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், துறையூர் சவுடாம்பிகா பள்ளியை சேர்ந்த அபிநயா, நவிதா ஸ்ரீ, ஸ்ரீநிதி, துறையூர் விமலா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த காமேஸ்வரி, பிரித்திகா, எஸ்விவி பள்ளி மாணவி லோசினி ஆகிய ஆறு பேர் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.
அடுத்தபடியாக, 496 மதிப்பெண்களை பெற்று 14 பேர் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

May 23, 2016

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிääதலைமையில் நடைபெற்றது



திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 25 மனுக்களும் குடும்ப அட்டை தொடர்பான 07 மனுக்களு வேலை வாய்ப்பு கோரி 18 மனுக்களும்  முதியோர் விபத்து நிவாரணம் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகைகோரி 30 மனுக்களும் அடிப்படை வசதிகள் கோரி 07 மனுக்களும் புகார் தொடர்பான மனுக்கள் 08 கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 02 மனுக்களும் திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் பெண் குழந்தைகள்  பாதுகாப்புத் திட்டம் சலவைப் பெட்டி தொடர்பான 07 மனுக்களும்; மற்றும் இதர 36 மனுக்களும் என மொத்தம் 140 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) டினாகுமாரி மாவட்ட வழங்கல் அலுவலர் தராஜேந்திரன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி 23.5.16                சபரிநாதன் 9443086297

திருச்சி மக்களின் முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவை திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகே எல்சிடி டிவியில் கழகத்தினரும் பொது மக்களும் கண்டு கழித்தனர் மேலும் புறநகர் மற்றும் பல்வேறு இடங்களில் கொண்டங்கள் கோலகழமாக காணப்பட்டது
மத்தியபேருந்து நிலையம் அருகே ஏராளமன மக்கள் முதல்வர் ஜெயலலிதா வின் பகவி ஏற்பு விழாவை கண்டு கழித்தனர் மற்றும் இந்நிகழ்ச்சியில் ; மண்ணச்சநல்லூர் துணை சேர்மன் வெற்றிச்செல்வி மகளிர் அணி ஒன்றிய செயலாளர் ராஜலெட்சுமி கழக வீரங்;கணை செல்வி கணேசன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ..தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல்இமண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன்  ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் .கண்ணனூர் சாந்த தேவராஜ்

ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்