Dec 25, 2014

திருப்பூரில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம்

திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் கழக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு ஒன்றிய செயலளார் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம்  மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், எம்.மணி, சார்பு அணி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், ஜோதிமணி, சித்ராதேவி, மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, வளர்மதி கருணாகரன், சாகுல்ஹஅமீது, தாமோதரன், கண்ணன், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, கண்ணபிரான், வசந்தாமணி, பிரியா சக்திவேல், ரத்தினகுமார், ராஜ்குமார், ரஞ்சித்ரத்தினம், நீதிராஜன், பாசறை யுவராஜ் சரவணன்,லோகநாதன், பரமராஜன் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்குமேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம்எம்.மணி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Dec 23, 2014

திருப்பூரில் பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் விநியோகம்

திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கியும் கருணாநிதி ஆட்சியில் செய்த ஊழல் குறித்த துண்டு பிரசுரங்கள்  நிகழ்ச்சி 22வது வார்டு  கொடிக்கம்பம் அருகில் வார்டு கவுன்சிலர் கலைமகள் கோபால்சாமி தலைமையில்  நடைபெற்றது. மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்,பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக  செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், சிறப்பு அன்னதானம் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார் 
இந்த நிகழ்ச்சியில் வடக்கு  செயலாளர் ஜெ.ஆர்.ஜான், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,ஹரிகரசுதன், வளர்மதி கருணாகரன், சாகுல்அமீது, தாமோதரன், ரத்தினகுமார், அசோக்குமார்,காலனி செல்வராஜ், நீதிராஜன், கவுன்சிலர்கள் சபரிஸ்வரன், விஜயகுமார், ரங்கசாமி, கனகராஜ் புலவர் சக்திவேல், வேலுமணி, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன்,உள்ளிட்டவரக்ளும், ஜெகநாதன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் மகளிர் அணியினர், பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக மாவட்ட  அண்ணா தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் அணியின் மாவட்ட செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கவுமாரியம்மன் கோவிலில், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக வேண்டி சிறப்பு பூஜைகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நடத்தி வைத்தார். 



Dec 22, 2014

தொகுப்பு வீடுகள், அம்மா நகர் திறப்பு



திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி, கேத்தனூர் ஊராட்சி எட்டமன் நாயக்கன்பாளையத்தில், தமிழக அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதிக்கு அம்மா நகர்' என பெயர் சூட்டப்பட்ட பலகையும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் எஸ்.சிவாச்சலம், எம்.கே.ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், கரைபுதூர் ஊராட்சி தலைவர் ஏ.நடராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது ஆகியோர் உள்ளனர்.

திருப்பூரில் பிக்-பஜாரில் நடந்த ரத்த தான முகாமினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்



திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடைபெற்றது.முகாமிற்கு 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். திருப்பூர் பிக்-பஜார் கிளை மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமினை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமினை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தங்கவேல் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கே.என்.விஜயகுமார், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், கண்ணன், ராஜேஷ்கண்ணா. கண்ணபிரான், யுவராஜ்சரவணன், ரத்தினகுமார், அசோக்குமார், பரமராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக்-பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். 

திருப்பூரில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கந்தபெருமான் கோவிலில் ஹோமம் நடத்தினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், திருப்பூரில் தொழில் சிறக்க வேண்டியும் கல்லூரி சாலையில் கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ கந்தபெருமான் கோவிலில் தலைமை குருக்கள் சந்திரசேகரன் தலைமையில்  மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் இன்று பகல் 11 மணியளவில் சத்சீத சன்மான்ய திருடதி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், எம்.எல்.ஏ., கருப்பசாமி, சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெகதம்பாள், பலல்டம் எம்.கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள்  கே.என்.விஜயகுமார், ஒன்றியகுழுதலைவர் ஆர்.சாமிநாதன்,துணை தலைவர் சிராஜ்தீன், அன்னூர் காளியப்பன், சில்வர் வெங்கடாசலம், அவினாசி மு.சுப்பிரமனியம், மண்டலத்தலைவர் கிருததிகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பிரியா சக்திவேல், வி.கே.பி.மணி, வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், அவினாசி ராமசாமி, ஜெகதீசன், சேயூர் வேலுசாமி, வெ.அய்யாசாமி,ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜ், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன்,  திருமுருகன் பூண்டி பேரூராட்சி துணை தலைவர் விசுவநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர், மங்கலம் ,முருகசாமி, அஸ்கர் அலி, பாலசுப்பிரமணியம், சூர்யா,


கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வளர்மதி கருணாகரன், தாமோதரன்,மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அட்லாஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, எஸ்பி.என்.பழனிச்சாமி, உஷா ரவிகுமார், ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், ரஞ்சித் ரத்தினம், சடையப்பன், நீதிராஜன், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

திருப்பூர் அடுத்துள்ள மங்கலத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ.,பரமசிவம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில் நடை பெற்றது. முகாமிற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல், மங்கலம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சிராஜ்தீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், முதியோர், விதவை உதவி தொகை, ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ், உள்ளிட்ட 343 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர் அதில் 293 (90 சதவீதம்) மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம் பேசியதாவது:-
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உலகம் போற்றும் அம்மா திட்டம் என்ற உன்னத திட்டத்தை தந்துள்ளார். இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் திட்டங்களை நீங்கள் அனைவரும் பெற்று பயன் பெறவேண்டும். இது போன்ற நல்ல திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழங்க உள்ளார்.அவருக்கு நீங்கள் என்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு பரமசிவம் எம்.எல்.ஏ.பேசினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம் தனது வாழ்த்துரையில் பேசியதாவது:-
இது போன்ற நல்ல திட்டங்களை அளித்து வரும் ஜெயலலிதா கரங்களை நீங்கள் வலுபடுத்தும் வகையில் வரும் காலங்களில் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் கோரிக்கை எதுவானாலும் உங்கள் பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் அளியுங்கள் அங்கு நிர்வர்த்தி செய்து தரப்படும் என பேசினார்.
முகாமில் ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணி, பல்லடம் மார்க்கெட்டிங் சொசைடி தலைவர் சித்துராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஸ்கர் அலி, நாசர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி நன்றி கூறினார்.
இதேபோல் திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு சங்கத்தலைவர் மு.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில் 210 மனுக்கள் பெறப்பட்டு அதில் 108 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. அவற்றை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சிவாஜி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் கவிதா தங்கராஜ் மாற்றும்போது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 6 நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டத்துக்கு என புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் திட்டக்குழுகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் வி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், திட்டமிடுதல் அலுவலர் வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், பிற துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆய்வு செய்து பேசியதாவது:–
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 6 நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.4 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் எந்திரங்கள் வாடகைக்கு விடுவதில் இலக்கை அடையவில்லை. எனவே இதுபற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்திரங்களை முழுமையாக வாடகைக்கு விட வேண்டும்.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளன. இவற்றில் மீன் வளத்துறையினர் போதுமான மீன் குஞ்சுகளை விட வேண்டும். மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை போன்றவற்றில் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பில்லூர் 2–வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு என்று இதுவரை தனியாக சுற்றுலா அலுவலகம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்து, புதிதாக ஒரு அலுவலரை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் திட்டக்குழுஉறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், பழனிசாமி, நடராஜன், கோவிந்தசாமி, சண்முகசுந்தரம், ஜி.வி.வாசுதேவன், ஜெயலட்சுமி உள்ளிட்டவர்களும் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அருகே புது வாழ்வு திட்டத்தில் அரசின் நல உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கேத்தனூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.93.27 லட்சம் மதிப்பில்  97 மாற்று திறனாளிகளுக்கான உபகரனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா  ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சிகளும் நிறைவேற்றிய வரலாறு இல்லை.ஆனால் இந்தியாவில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களும் ஜெயலலிதா அரசில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை நிச்சயம் பெற்று இருப்பார்கள்.அதற்கு உதாரணம் கேத்தனூர் ஊராட்சியில் அனைத்து கிராமங்களும் இன்று சிறப்பாக  இருக்கிறது என்பதற்கும், இந்த ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்வதற்கும் காரணம் ஜெயலலிதாவின் திட்டங்கள்.அனைத்தும் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது அதை நீங்கள் உணர வேண்டும். அரசை தேடி மக்கள் சென்ற காலம் போய் ஜெயலலிதா வழி காட்டுதலின்படி இன்று மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது.
இந்த ஊராட்சியின் மந்திரிபாளையம் பகுதிக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும். முதியோர் ஓய்வூதிய தொகை 210 பேருக்கு இந்த கிராமத்தில் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் 17 ஊராட்சிகளில் ,2468 குடும்பங்கள் மேம்பட புது வாழ்வு திட்டம் வாய்ப்பு அளிக்கிறது. புது வாழ்வு திட்டம் மூலம் 11218 பயனாளிகள்  பயன் பெற்று இருக்கிறநற். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தது ஜெயலலிதாவின் திட்டம் தான். ரூ.15.60 கோடி செலவில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 634  சுய உதவி குழுக்கள் பயன் பெற்றுள்ளது, இரு பாலருக்கும் இத்திட்டம் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
17 ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற வுடன் 1 லட்சம் பட்டாக்களும், அடுத்த ஆண்டில் 2 லட்சம் பட்டாக்கள் வழங்கவும் அறிவித்தார். நமது மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயித்தார். இது வரை 6 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.,
மாற்றுத்திறனாளிகளுக்கு , வாசிப்பாளர்களுக்கு இரு மடங்கு கல்வி உதவி தொகை, ஜெயலலிதா அறிவிப்பின்படி, அவரது வழி காட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மன நல காப்பகம் அமைக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதுவும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வண்ணம் செயபடுத்தும் அரசாக மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி செயல்படுகிற இந்த அரசு செயல்படுகிறது. என்றைக்கும் அவரது விசுவாசிகளாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன்,  பொங்கலூர் ஒன்றியக் குழுத்தலைவர் 
நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய தலைவர் எம்.கே.ஆறுமுகம்,கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், முருகசாமி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், புத்தரச்சல் பாபு, சித்துராஜ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், மாவட்ட சுகாதாரத்துறை  துணை இயக்குனர் டாக்டர் ரகுபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது,உதவி அலுவலர் பாலாஜி, மற்றும் ஏ.டி.பி.கிரிதரன், அர்ஜுன், பொது மக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



திருப்பூரில் கியாஸ் மணியம் பெற சிறப்பு முகாமை துணை மேயர் தொடங்கி வைத்தார்

திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல்கியாஸ் ஏஜென்சி விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டஇளைஞர் அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான  சு.குணசேகரன், பாரத் கியாஸ் ஏஜென்சியுடன் இணைந்து திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் கியாஸ் மானிய பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கியாஸ் மானிய பதிவு முகாம் நடந்தது. திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு  செய்திருந்தார்.இதனால் ஒரே நாளில் 31-வது வார்டு பகுதியை சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கியாஸ் மானியம் பெற பதிவு ,செய்தனர். இந்த முகாமில் பி.கே.எஸ்.சடையப்பன், சிவகுமார், மாப்பிள்ளை என்கிற வெங்கிடுபதி ஆகியோர் உள்ளிட்ட கியாஸ் ஏஜன்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வருகின்ற 23 ந் தேதி வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மக்களின் முதல்வர் இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் கியாஸ் மானியத்துக்காக வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் தெரிவித்தார்.