Jul 19, 2017

திருச்சி சமூக நலத்துறை

திருச்சி 19.7.17
திருச்சி சமூக நலத்துறை சார்பில் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்களுக்கு என்ன சட்ட என்பதை விளக்க விழிப்புணர்வு முகாம்மத்திய பேருந்து நிலையம்அருகே உள்ள தனியாhபள்ளி; அரங்கில்நடைபெற்றது
அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறித்த விளக்க உரைகள் பங்கு பெற்ற பெண்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்த முகாம் தமிpழகத்தில் 5 மாவட்டகளில் ஒரு மாவட்டமாக திருச்சியில் ஒரு பகுதி நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியை சட்டக்ஆலோசனை மையத்தின் செயலர் கீதா துவங்கி வைத்தார். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் கௌரி விளக்கமளித்தாh.;இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நலத்துறை அதிகாரி உஷா ராணி அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது


Jul 14, 2017

திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு



திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு
தமிழகத்தில் அம்மா இறந்தவுடன்   சதிகாரர்களின் பிடியில் இருந்தது தற்ப்போது தான் விடிவு பிறந்துள்ளது நாம் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அம்மா வழியில் நடக்கும் ஓ பிஎஸ் அவர்களை ஆதரித்து ஓ பிஎஸ் அவர்களை முதல் ஆக்குவோம் எல்லாம் ஒன்று சேருவோம் என்று முன்னால் அமைச்சர் பூனாட்சி கூறினார்   இந்நிநிகழ்ச்சியி ல் முன்னாள் அமைச்சர் பூனாட்சி பரஞ்சோதி முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி ஆகியோர் மற்றும் வி என் ஆர் செல்வம் , பிரேம் ஆனந்த் மற்றும்பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்   

Jul 12, 2017

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம்
திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம் செய்யப்பட்டதும் திருப்பால் ஆழ்வாரின் அவதார ஸ்தலமாக உறையூர் நாச்சியார் கோவில் கொண்டாடப்படுகிறது. இங்கு பிரதானமாக மகாலெட்சுமி பரிபூர்ண அனுகிரஹம் பெற்ற இத்திருக்கோயிலில்  பலப்பல என்று10 நாள் உற்சவம் என இன்று கடைசி நாள் உற்சவம் நடைப்பெற்றது.
இந்த மகாலெட்சுமி கர்ப்ப கிரகத்தில் புறப்பட்டு இந்த மண்டபத்தில் எழுந்தருளிருந்தும், இந்த உற்சவத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் மன்னும் நம்மை நாடி வரும் அடியார்க்கு எல்லாம் நலன்களும் கிடைக்க பெற்று தாயார் திருவடிகளை பிராத்திக்கிறேன் என்றார்.
பேட்டி: சுந்தர். பட்டர் (கோவில் அர்ச்சகர்

Jul 10, 2017

Trichy New superindent Police for Trichy rural


திருச்சி அஇஅதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் மாநில செயலாளர் சிவபதி தலைமையில்

அதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர்
இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு அகில இந்திய கபடி போட்டி திருச்சி சிவானி கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியனா அணியும், பெண்கள் பிரிவில் ஹிமாசல பிரதேச அணியும் வெற்றிப் பெற்றன. இந்த அணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோப்பை வழங்கினார்.

இப்போட்டியில் 29 மாநிலங்களிலிருந்து பெண்கள் பிரிவில் 21 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் கலந்து கொண்டனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிமாச்சல பிரதேச அணி ஹரியானாவை 33-12 என்ற கணக்கில் வென்றது. அதுப்போல ஆண்கள் பிரிவில் ஹரியனா அணி பஞ்சாப் அணியை 20 - 14 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசாக 3 இலட்சம் 2 இலட்சம் 1 இலட்சம் மற்றும் கோப்பையும் வழங்கினர்.

போட்டியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி இந்த விளையாட்டு தெற்காசிய அளவில் அதிகமாக விளையாடப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடந்து வரும் கபடி உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் வென்றதில்லை. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சிவபதி தலைமை வகித்தனர். மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், விஜயபாஸ்கர் துரைக்கண்ணு,M.P.க்கள் ரெத்தினவேல், விஜிலா MLA க்கள் முருகுமாறன், செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2017

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம்,அமைசர் தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு உள்ளிட்ட சுமார் 2 .50 கோடி செலவிலான பூஜை பொருட்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 370 கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது.

அறிஞர் அண்ணா காலத்தில் தலைமை, தலைவர் என்ற பதவி இல்லை.
அதனை உருவாக்கியவர் கலைஞர் தான். அமைச்சர்
வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி -
தற்போதைய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு

Jun 4, 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணி இ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

   
 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகும். நான் இங்கு வருவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றியுள்ளேன். தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாகவும்முறையாகவும்எ ந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

    தமிழகத்தில் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு போதிய அளவு தமிழக அரசு நிதி வழங்கி இருக்கிறது. குடிநீர் பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் குடிநீர் பிரச்சனைக்கு போதிய அளவு நிதி வழங்கி இருக்கிறது. கூடுதலாக ஊரக நகர்புற வளர்ச்சி நிதியிலிருந்தும் குடிநீர் பிரச்சனை தீர்க்க நிதி வழங்கப்படுகிறது. நிதி ஒரு பிரச்சனையாக இருக்காது. குடிநீர் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும். 

மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்ää திட்டங்கள் துறை வாரியாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொன்றாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும். மேலும் மக்கள் நலக் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.மலர்விழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

Oct 21, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்  திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிராத்தனை செய்யப்பட்டது.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூலோக நாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் கே.கே.நகர் விநாயகர் கோவில், ஐயப்பா நகர் பெருமாள் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் பெரிய கடை வீதி என்.எஸ்.பி. மகாலில் நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்ரமணியம், மேயர் ஜெயா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாவட்ட பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் ஜாக்குலின்,   மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால்,  மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழரசி,  பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி என்.சண்முகம், அன்பழகன், டைமண்ட் திருப்பதி, நாகநாதர் பாண்டி,   மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்