திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அதிமுகவினர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டத்தில் அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் .
இந்நிலையில் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகவும்,மரியாதை குறைவாகவும் கேலி கிண்டல் செய்து பேசியிருந்தார்.இச் செயலை கண்டிக்கும் விதமாக முசிறி கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்,முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கவேல் ரத்தினவேல் இந்திரா காந்தி மல்லிகா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது உதயநிதிஸ்டாலின் பேசியதை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.