*திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்*
பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான இக்கோயிலில் கடந்த மாதம் பூச்சொரிதல் விழா தொடங்கிய நாளில் உலக நன்மைக்காக அம்மனும், அவரின் பக்தர்களும் 28 நாட்கள் கடைப்பிடித்த பச்சைப் பட்டினி விரத நிறைவு, பூச்சொரிதல் விழா நிறைவு, சித்திரை தேர் திருவிழா தொடக்கம் ஆகியவை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றன.
அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்று, அம்பாள் முன்னிலையில் மேஷ லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்திலும், திங்கள்கிழமை இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்