திருச்சி,
நாடாளுமன்ற திருச்சி தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 379 .
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 241, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 940, திருநங்கைகள் 148 பேர் வாக்கு செலுத்தவுள்ளனர்.
914 மையங்களில், ஆயிரத்து 660 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. முன்னதாக காலை 6 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க, மாதிரி வாக்கு பதிவு நடத்தப்படுகிறது.
தேர்தல் மண்டல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், பறக்கும்படையினர், நிலை குழுவினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர், துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நேரு திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்களித்தார் திருச்சி சிவா திமுக மற்றும் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் சிறுபான்மை துறை அமைச்சர் வளர்மதி உறையூர் sms பள்ளியில் வாக்களித்தார் திருச்சி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்