Aug 31, 2017

திருச்சி 31.8.17 பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு


திருச்சி 31.8.17
பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை  அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு 

திருச்சி அஇஅதிமுகாவி;ல்புதிதாக  டிடிவி.தினகரானால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதில் பேசிய முன்னாள் தலைமைகொறாடாவும் தற்போது  மாவட்ட செயலாளருமான மனோகரன் கூறிய போது தற்போதைய ;முதல்வர் அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பாஜாகவின் காலடியில் அரசையும் அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர் என்றார்.
தியாகசின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களை அறிவித்தார் அதன் படி நாங்கள் முதல் முறையாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரவுள்ளோம் எ ன்பதை அறிந்த உள்ளுர் அமைச்சர்கள் ஆர்டிஓ மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஏவி எங்களை மிரட்டி தடுக்க முயற்சி செய்ய பார்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
டிடிவி. தினகரன் தலைமையில் திருச்சி என்றும் அவர் பின்னால் இருந்து வெற்றியை பெற்று தருவோம் என்பதை நாங்கள் கூறுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் கழகஅமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான்கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மனோகரன்

Aug 27, 2017

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

தினகரன், சசிகலா ஆகியோர் செல்லாக்காசுகள் என்று எம்பி குமார் கொடுத்த பேட்டிக்கு கண்டனம். நாங்கள் இதுவரை பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம்.  பொறியாளர் கலியப்பெருமால் வீட்டிற்கு உதவியாளராக வந்தவர் குமார். கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். யார் யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தயக்கம் காட்டவில்லை

ஊழல் ஆட்சி நஞைபெறுகிறது என மக்கள் உணர்கிறார்கள். கூடிய விரைவில் ஆட்சியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவிற்கு இருந்த பாதுகாவலர்கள் எடப்பாடி க்கும் பணிபுரிகிறார்கள். அம்மா-வை போலவே நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்பி குமார் சின்ன பையன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
22 எம்எல்ஏக்கள் உங்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யுங்கள். முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார் முதல்வர். வெல்லமண்டி நடராஜன் எங்கள் கோஷ்டியில் இருந்தால் பதவி போகும் என்ற பயத்தில் பேசிக்கொண்டுள்ளார்.
தினகரனின் உருவபொம்மையை எரிக்க காவல்துறை அனுமதி கொடுக்கிறது. தவறான பாதையில் காவல்துறை செற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நம்பி யாரும் இறங்காதீர்கள்.
இந்த அரசு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும்.
இக்கட்சியை டில்லியில் இருந்து ஒரு முதலாளி இயக்க முயற்சிக்கிறார். விலைபோய்விட்டார்கள். 11 துரோகிகளை கூடே இணைத்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். சசிகலா இதுவரை யாரையும் தவறாக பேசவில்லை. சிறையில் இருக்கும் போது கூட எடப்பாடி குறித்து நலம் விசாரித்து வருகிறார். - புகழேந்தி
 கமல்ஹாசனுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடுகின்றனர். கவர்னர் பதில் அளித்துவிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இலீலை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
 சசிகலா உதவி இல்லையென்றால் இன்று எம்பி குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. 2006 க்கு பிறகு தான் குமார் கட்சிக்கு வந்தார். தினகரனையும் சசிகலாவையும் செல்லாத நோட்டுகள் என்று கூறியவர் கள்ளநோட்டு. - முன்னாள் கொறடா மனோகரன் பேட்டி
  ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சூட்கேசுடன் ஓடிவிடுவார்கள்.கட்சியை டிடிவி தான் காப்பாற்றுவார்-புகழேந்தி

Aug 15, 2017

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்குஇந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று 15.08.17-ம் தேதி காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் சுதந்திர தின விழாவில்
வழங்கினார்.

மேலும்திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு.மு.அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.மு.அங்குசாமி ஆகியோர்களுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி மாநகர காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமைக் காவலர் 2517 திரு.N.கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் 2810 திரு.வு.அருள் முருகானந்தம் ஆகியோர்களுக்கும் முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்தமைக்காக திருச்சி கைவிரல்ரேகை பதிவுக்கூடத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.ளு.ராதாகிரு~;ணன்கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கு.இருதயராஜ் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் 2872 திரு.ளு.சேகர் மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் 936 திருமதி.ஆ.வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் 2793 திரு.மு.வெங்கடே~;பாபு முதல்நிலைக் காவலர் 2113 திரு.ளு.சுந்தரமூர்த்தி ஆகியோர்களுக்கு முதலமைச்சரால் அண்ணா பதக்கம் சென்னையில் இன்று 15.08.2017-ம் நடைபெற்ற சுதந்திர விழாவில் வழங்கப்பட்டது.

Aug 10, 2017

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி



திருச்சியில் கதர்ஆடையை பிரபலப்படுத்தும்வகையில் விசைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார், ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.

கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணியவேண்டும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறது, இதனடிப்படையில் திருச்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர் வாங்குவோர் சந்திப்பு மற்றும் விசைத்தறி ஆடைகள் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பங்கேற்று தொடங்கிவைத்து, கதர்ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். இதில் 15அரங்குகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் கதர்ஆடை நெசவாளர்களின்; ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு ரகத்தினாலான உடைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயனுறும்வகையில் உற்பத்தி விலைக்கே நேரடி விற்பனை செய்யப்படுவதால், இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான ஆடை ரகங்களை தேர்வுசெய்துவருகின்றனர்.

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி
மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேரடி சந்திப்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஆட்சித் தலைவர் ராஜாமணி துவங்கி வைத்தார்

Aug 3, 2017

திருச்சி 02.08.17ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு

திருச்சி             02.08.17  

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு .



திருச்சி ரயில்வே ஜங்சன்  நடைமேடை (பிளாட் பார்ம்) டிக்கெட் ரூபாய் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய  வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் (TTV தினகரன் ஆதரவாளர் ) ராஜராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு .தமிழகத்தில் மிக முக்கியமான நகரம் இது பாரம்பரியமான இரயில்வே ஸ்டேஷன். இங்கு அதிகபடியாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக வருகின்ற இடம் வயதானவரை விடுவதற்குக்கும் மற்றும் பள்ளிக்கு குழந்தை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவி கலைவிடுவதற்கும் அவர்களது தாய்மார்கள் வந்து பிளாட்பாரத்தில் விடுவதன் அவசியம் உள்ளதாலும் இதனை மனதில் கொன்று பிளாட்பார்ம் விலையினை குறைக்க வேண்டும்



திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் திமுக எம்பி சிவா ஆகியோர் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என  குற்றச்சாட்டு தெரிவித்தார்.

திருச்சி மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று திருச்சி ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்ற

மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது



தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.



2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்



4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்




5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது