Oct 24, 2014

உடுமலைப்பேட்டை நகர்மன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமையில் ஜெயலிதா விடுதலை பெற்றதையொட்டி ஆறுபடை முருகன் கோவில்களுக்கு 61 அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் யாத்திரையாக சென்று மொட்டை அடித்தும்,முடிகாணிக்கை செலுத்தியும்,தங்கரதம் இழுத்தனர்,


அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை பெற்றதை யொட்டியும், அவர்மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டியும்,  தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டபேரவை தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில், உடுமலைப்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான எம்.ண்ணாயிரம் தலைமையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் 61 பேர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க மனமுருகி வேண்டி உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பவுணர்மி பூஜை நடத்தி ஆறுபடை முருகன் கோவிலுக்கு யாத்திரையை தொடங்கினர்.
பின்னர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து,9 பேர் முடி காணிக்கை செலுத்தி பன்னீர் அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் கும்பகோணம் சுவாமிமலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து  9 பேர் முடி காணிக்கை செலுத்தி சிறப்பு சந்தன அபிஷேகம் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பால் பஞ்சாமிதம் அபிஷேகம் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தேனும்,தினைமாவும் அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை, பூஜைகள் நடத்தி 18 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் நடத்தியும், பிரார்த்தனை செய்து விபூதி அபிஷேகம் செய்து 10 பேர் முடி காணிக்கை செலுத்தி, தங்கரதம் இழுதனர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி தெண்டபாணி சுவாமி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தும்,சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தி 13 பேர் முடி காணிக்கை செலுத்தி மொட்டை அடித்து, தங்கரதம் இழுத்தனர். பின்னர் அவர்கள் உடுமலை மாரியம்ம்மன் கோவிலில் சென்று அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
இந்த அனைத்து நிகழ்சிகளிலும் உடுமலை நகர் மன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சற்குணசாமி உமா குப்புசாமி, பெயிண்டர் பாலு, ராஜேந்திரன், பி.டி.குமார், முத்துகுமார், முருகேசன், பாப்பாத்தி, மயிலாத்தாள், பஞ்சலிங்கம், வலசப்பன், சுந்தரம், டைலர் வேலுச்சாமி, தெண்டபாணி, செல்லம்மாள், சுலோக்சனா, செம்பியன், ராஜேந்திரன், மணிவண்ணன், வின்சென்ட், செல்வராஜ், செம்பே கவுண்டர், ரொட்டி என்கிற அலிபாவஷா, வேலுச்சாமி ஆசாரி, மாரியப்பன், சரஸ்வதி, ராதாகிருஷ்ணன், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி, வினோத்குமார், ராமசாமி ஆசாரி, கார்த்தீபன், முத்துராமன், சின்னு செட்டியார், ராஜகோபால், முத்துலட்சுமி, முருகேசன், பனியன் துரை என்கிற துரைசாமி, சென்னை டி.பரமசிவம், பஞ்சலிங்கம், ராமச்சந்திரன், ஜோதிடர் முருகசன், பொற்கொடி, ஆருமுகபாண்டியன், பண்ணைகிணறு கார்த்திகேயன், சுபாஸ் சந்திரபோஸ், சிதம்பர நாதன், நடராஜ், சண்முகம், கபிலன், சரஸ்வதி அம்மாள், செந்தில் மேஷன், ஆறுமுகம் (ஐ.ஓ.பி.), நாகராஜ், ஆருக்கும் (சமையல்), போடிபட்டி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரபட்ட பொய் வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுபட்ட பின்னர் இதே போல் ஆறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி, தங்கரதம் இழுப்பதாக நகராட்சி துணைத்தலைவர் எம்.ண்ணாயிரம் தெரிவித்தார்.