Nov 26, 2018

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி


திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Nov 4, 2018

திருச்சி இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்திய மாரத்தான்


ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக‌ இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்




திருச்சி  இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.

பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.

கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புண‌ர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம்  எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.

Oct 16, 2018

திருச்சி உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்

Oct 12, 2018


Oct 7, 2018

திருச்சி சுகாதாரத்துறை அமைச்சர்வி ஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி_07.10.18

திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று  ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

Oct 5, 2018

திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி :



திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி-05.10.18

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.

Sep 25, 2018

மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி

மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் 

Sep 19, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் கண்காட்சி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்

திருச்சி – 18.09.18

 
       



திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.

முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.
                 


தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்