Dec 7, 2020

திருச்சிராப்பள்ளி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா

 திருச்சிராப்பள்ளி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான மகசூலை பெற முடியும்.  ஆரோக்கியமான மண்ணே அனைத்து விவசாயித்திற்கும்  ஆதராம்.  பயிர் சாகுபடியில் அதிக மகசூலைப் பெற ஆரோக்கியமான மண் இன்றியமையாதது.  ஆகவே மண் வளத்தை பெருக்கும் நோக்கோடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் நாள் உலக மண்வள தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வரும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி வேளாண்மைத் துறையும் இணைந்த உலக மண்வள தினவிழா 05.12.2020 அன்று சிறுகமணி தேர்வு நிலை சமுதாயக் கூடத்தில் நடத்தியது. இவ்விழாவில் புதுதில்லியிலிருந்த மண்வள தினம் துவக்க விழா நேரடி அலை மூலம் காணொலி காட்சியாக விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை தலைமை ஏற்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஆறு.பெரியகருப்பன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் மண்வள அட்டை குறித்து எடுத்தரைத்தார்.  இவ்விழாவில் சிறப்புரையாற்றிய பெட்டவாய்த்தலை கூட்டுறவு வங்கி தலைவர் திரு.முஏளு. செந்தில்குமார் அவர்கள் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திரு.பாபுராஜ் அவர்கள் மண்வள மேம்பாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் வேளாண் பொறியியல் துறை உதவிபொறியாளர் திரு.அ.வெற்றிவேல் அவர்கள் மண்வள மேலாண்மையில் பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் அன்பில் எடுத்தரைத்தனர். இதை;த தொடர்ந்து தொழில்நுட்ப உரைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வழங்கப்பட்டது.



 மண்வளத்தில் உயிர் உரங்கள் மற்றும் மட்க வைப்பான்கள் குறித்து அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கி.க.அனிதா அவர்களும்ää மண்வள மேம்பாட்டில் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்களும் மண் மற்றும் நீர் பரிசோதனையும்ää மண்வள மேலாண்மையில் மண்வள அட்டையின் பங்கும் குறித்து மண்ணியில் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்களும் மண்வள சீர்கேட்டின் இரசாயன பூச்சிக்கொல்லியின் பங்கு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிர்பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இரா.ஷீபா ஜாஸ்மின் அவர்களும் மண்வளமும் மனித நலமும் குறித்து மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கா.கீதா அவர்களும் எடுத்தரைத்தனர்.  இதனைத் தொடர்ந்து முன்னோடி விவசாயிகள் மண் வளம் பேணுதல் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்துடன் மண்வள மேலாண்மை குறித்து கருத்துக் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர். விழாவின்  ஆரம்பத்தில் வரவேற்புரை வழங்கிய சிறுகமணி வோளண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் மண் பரிசோதனையின் அவசியம் குறித்து எடுத்தரைத்தார். இறுதியாக தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே முடிவடைந்தது. இவ்விழாவில் 200-க்கு மேற்பட்ட விவசாயிகள்  மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.