Feb 9, 2022

அதிமுக வேட்பாளர் கரும்புச்சாறு கொடுத்து பிரச்சாரம்

 


வார்டு பகுதி மக்களுக்கு கரும்புச் சாறு  எடுத்து கண்ணாடி குடுவையில் கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி


 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். 


இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வார்டு மக்களுக்கு கரும்பு சாறு  கொடுத்து  வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி 9 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி பிரச்சாரம்


 திருச்சி மாநகராட்சி 9 வது வார்டில் அதிமுக வேட்பாளர் W. ராணி வெஸ்லி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 9 வது  வார்டில் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 9 வது வார்டுக்குட்பட்ட 

வண்டிக்கார தெரு, வாலாஜா தெரு, பங்காளி தெரு  உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் சுப்ரா, உறையூர் பகுதி அவை தலைவர் வெஸ்லி, IT WING செயலாளர் தாயார் சீனிவாசன், K. செல்வம், P. செல்வம், ரஜாக், ஜெய்சங்கர், பாபர் அலி, ரமேஷ், IT WING இணை செயலாளர் பாலாஜி

உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 8, 2022

திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரியா சிவக்குமார் பிரச்சாரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிகழ்வின்போது பூக்கடை ரங்கராஜ் உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 05 வது  வார்டில் அதிமுக சார்பில் கே.எஸ்.ராஜு  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 05 வது வார்டுக்குட்பட்ட


மேல கொண்டையம் பேட்டை, எடத்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Feb 7, 2022

திருச்சி மாநகராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் வனிதா பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் வனிதா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர்

11 வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று 11 வது வார்டுக்குட்பட்ட உறையூர் இந்திரா நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, சுபானியாபுரம், சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Feb 5, 2022

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் தீவிர பிரச்சாரம்

 



மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்      ஐம்பதாவது வார்டுக்குட்பட்ட  ஆலம் தெரு தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர் கூறுகையில் நான் பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்

 பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் நான் சேவை செய்யக் கடமைப் பட்டுள்ளேன் அரசு சலுகைகள் ஆன அரசு இடமிருந்து பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவைப்பட்டாலும் தொடர்ச்சியாக  பொது மக்களுக்கு பெற்றுத் தருவேன் 

என்னை பொது மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்களில்  ஒருவராக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்     இந்நிகழ்வின் போதுவட்ட செயலாளர் .சுந்தர் வடிவேல் .ரபிக். மாவட்ட.மீனவரணி பொருளாளர்சரவணன் . பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ரவி பகுதி துணைச் செயலாளர் முத்துக்குமார் நவ்ரோஜ் அபுதாகிர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்

Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.