திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்
குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்
இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருச்சி 31: சக்ஷம் என்பது PCRA எனப்படுகிற பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து புரிந்துணர்வு ஏற்படுவதற்காக நடத்தும் ஒரு மாத கால பரப்புரையாகும். இந்த ஆண்டு, இந்த பரப்புரை, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15, 2021 வரை "
பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்" என்கிற கருப்பொருளில் நடத்தப்பட்டு வருகிறது.
சக்ஷம் 2021 பரப்புரையின் ஒரு பகுதியாக, இந்தியன்ஆயில் நிறுவனம், திருச்சியில் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சைக்கிள் பேரணி, ஆர்டிஓ மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் விசுவநாதன் அவர்களால் இந்தியன் ஆயில், துணை பொது மேலாளர் பாபு நாகேந்திரா, இந்தியன் ஆயில் முதன்மை பகுதி மேலாளர் ராஜேஷ், லூப்ஸ் டெக்னிக்கல் சேல்ஸ் மேலாளர் ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 200 ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இந்த சைக்கிள் பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
குடிமக்கள் இடையே எரிபொருள் சிக்கனம் பற்றியும் செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்துவதும் நோக்கமாகும். அதனால், பசுமையான சூழல் உருவாக ஏதுவாகும் என்பதோடு உடல்நலம் மேம்படும்.
இந்த பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏழு விஷயங்கள் குறித்தும் பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்படும்.
இந்த ஆண்டு சக்ஷம் பரப்புரை நோக்கங்கள் :
1. கேஸ் அடிப்படையிலான பொருளாதாரம்
2. பூமியின் கீழ் கிடைக்கும் எரிபொருள்களைத் தூய்மையான முறையில் உபயோகித்தல்
3 பயோ - எரிபொருள்களில் தனிச்சிறப்பு கவனம்
4. 2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 450 GW ஆக ஆக்குதல்
5. கரியமில வாயு சார்ந்த போக்குவரத்தை நீக்கும் முன்முயற்சி
6. ஹைட்ரஜன் போன்ற எரிபொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்
7. ஆற்றல் சார்ந்த சிஸ்டம்களில் டிஜிட்டல் நவீனத்துவம்
PCRA அமைப்பும் இந்தியன்ஆயில் உள்ளிட்ட ஆயில் & கேஸ் நிறுவனங்கள், இந்த ஒரு மாத பரப்புரை காலத்தில் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மேக்கொள்ளும். 'சக்ஷம் சைக்கிள் நாள்', சைக்கிள் பேரணி, வர்த்தக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான பயிலரங்கம், இல்லத்தரசிகள் / சமையல் கலைஞர்களுக்காக எளிதான எரிபொருள் சிக்கன நடைமுறை குறித்த கருத்தரங்கு ஆகியவை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அதிமுகவினர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டத்தில் அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் .
திருச்சி தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி திருச்சி சென்றடைந்தது. அதன்பின்னர்,கொரோனாதடுப்பூசி திருச்சி சுகாதார மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் ஆறு லட்சம் பேருக்கு வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்துவதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. ஒத்திகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் நிலையில் அரசு உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 100 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்கள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.
தடுப்பு ஊசி ஒரு நபருக்கு இரண்டு (டோஸ்) முறை செலுத்த வேண்டும். முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகு அடுத்தகொரோனாதடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம்கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 42 நாள்களுக்குப் பின்னரே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைத்து பரிசோதனைகளையும் முடித்த பின்னரே தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முன்கள பணியாளர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முடியும்.
இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. அவசியம் ஏற்பட்டால் மக்களின் அச்சத்தைப் போக்க நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து பதிவு செசெய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்
திருச்சிராப்பள்ளி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான மகசூலை பெற முடியும். ஆரோக்கியமான மண்ணே அனைத்து விவசாயித்திற்கும் ஆதராம். பயிர் சாகுபடியில் அதிக மகசூலைப் பெற ஆரோக்கியமான மண் இன்றியமையாதது. ஆகவே மண் வளத்தை பெருக்கும் நோக்கோடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் நாள் உலக மண்வள தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வரும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி வேளாண்மைத் துறையும் இணைந்த உலக மண்வள தினவிழா 05.12.2020 அன்று சிறுகமணி தேர்வு நிலை சமுதாயக் கூடத்தில் நடத்தியது. இவ்விழாவில் புதுதில்லியிலிருந்த மண்வள தினம் துவக்க விழா நேரடி அலை மூலம் காணொலி காட்சியாக விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை தலைமை ஏற்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஆறு.பெரியகருப்பன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் மண்வள அட்டை குறித்து எடுத்தரைத்தார். இவ்விழாவில் சிறப்புரையாற்றிய பெட்டவாய்த்தலை கூட்டுறவு வங்கி தலைவர் திரு.முஏளு. செந்தில்குமார் அவர்கள் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திரு.பாபுராஜ் அவர்கள் மண்வள மேம்பாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் வேளாண் பொறியியல் துறை உதவிபொறியாளர் திரு.அ.வெற்றிவேல் அவர்கள் மண்வள மேலாண்மையில் பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் அன்பில் எடுத்தரைத்தனர். இதை;த தொடர்ந்து தொழில்நுட்ப உரைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி