Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Jul 19, 2019

திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


                    
திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது



                      

அப்போது முன்னாள் டாஸ்மார்க் தொழிற் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கூறுகையில்அ அம்மாவின் ஆட்சியில் அம்மாவினால் 33 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற்றார்கள்ம்மா  தற்போது அண்ணன் எடப்பாடி யார் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ஊதிய உயர்வு  பெற்றுள்ளது இதுபோன்ற தொடர்ச்சியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் 





Jun 22, 2019

ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்கா




திருச்சி ஹோண்டா டூ வீலர் இந்தியா திருச்சியில் புதிதாக குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையுடன் இணைந்து இந்நகரின் முதல் போக்குவரத்து பூங்காவை தொடங்கி இருக்கிறது



சாலைகளை பயன்படுத்துவர்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போட்டுப் அவர்களிடையே விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்காவை தொடங்கியுள்ளது

ஹோண்டாவின் 14வது போக்குவரத்து பயிற்சி பூங்கா தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருப்பத்தூர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்யூனிகேஷன் பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஹோண்டா டூவீலர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது

Jun 10, 2019

Jun 1, 2019

திருச்சி தனியார் பேருந்துகள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - 31.05.2019

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.




கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.


ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Apr 20, 2019

குணசீலம் தெப்ப உற்சவம்

 குணசீலம் தெப்ப உற்சவம்  நடைபெற்றது
  


வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷி யின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் ஆக காட்சியளித்த திருத்தலம் குணசீலம் இந்த க்ஷேத்திரத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரதாரியாக கையில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் பூஜித்து வந்தால் அவருடைய பிரச்சனைகள் தீரும் என்பது அதிகம் அதேபோன்று திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செலுத்த இயலாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்துவதால் தென் திருப்பதி  என்று அழைக்கிறார்கள் இந்த இடத்திலே பிரதி வருடம் சித்ரா பௌர்ணமி அன்று எம்பெருமானுக்கு மிக விசேஷமாக நடைபெறுகிறது

எம்பெருமானுடைய அந்த புராண அந்த வரலாறு நிறைவு பெறும் வழியாக ஆதிமூலமே என்று அழைத்து அந்த கஜேந்திர மோட்சம் அளித்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த குணசீல  பெருமானுக்கு எப்போதும் சித்ரா பௌர்ணமியன்று பிரதி வருட  நடைபெற்று வருகிறது வருகிறது அவ்வாறு வருடமும் இந்த வருடமும் நடைபெற்றது

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் பாடி அருளிய ஸ்ரீமன் நாராயணனை போற்றும் வகையிலே இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே எம்பெருமானுடைய சன்னதிக்கு முன் புறமாக உள்ள பாபவிநாச தீர்த்தம் தொடக்கத்திலே தற்போது மிகவும் விசேஷமாக நடைபெற்று வருகிறது அவ்விதமே இந்த வருடமும் இந்த சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் அன்று எம்பெருமானுக்கு தற்போது விசேஷமாக நடைபெற்றுள்ளது எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி சகஸ்கர தீப அலங்கார சேவை கண்டருளி அதன்பின் எம்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார் அதன்பின் இங்கே மைய மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் அதன் பின்பாக விசேஷமான ஆராதனைகளும் நடைபெற்று எம்பெருமான் மண்டபத்தில் எழுந்தருளிய தீபாராதனை நடைபெற்றது அதன் பின்பு கண்ணாடி அறை சேவை நிறைவுபெற்று எம்பெருமான் எழுந்தருளினார் விசேஷமான வருடா வருடம் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே சிறப்பா நடைபெற்றது

Apr 18, 2019

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரபரப்பு பேட்டி








திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்களித்த பின்னர் பேட்டி அளித்தார்



திருச்சி வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் வாக்காளர் பெருமக்கள் காலையிலிருந்து எழுச்சியோடு வாக்களித்து கொண்டிருக்கிறார்கள் இன்று மேலான தகவலை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது என்பது வரலாறு இந்த முறை 10 கட்சிகளோடு கூட்டணியில் உள்ளோம் ஒரு லட்சத்தி 55 ஆயிரம் வாக்குகள் சென்றமுறை அதிகமாக பெற்று வெற்றி வாய்ப்பை பெற்றோம் இந்த முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார் மேலும் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனடிய ஆக  சரி சரிசெய்யப்பட்டு வாக்குு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்