Jan 9, 2016
Trichy west Mla paranjothi fund built newbusstop at Gh vayalur busstop inaguration
1/09/2016 11:47:00 PM
Jan 7, 2016
திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்
திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்
தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை முகாமில் வாழும் இலங்கைவாழ் மக்களுக்கும் பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி,சர்க்கரை மற்றும் கரும்பு, ரூ.100
பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை திருச்சி சிந்தாமணி கூட்டறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அரசு கொறடா மனோகரன்,மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், சட்டபேரவை உறுப்பினர்கள் சிவபதி, வளர்மதி, இந்திராகாந்தி உள்ளிட்டோர் பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Jan 6, 2016
Jan 5, 2016
திருச்சி 05.01.16 பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா
பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா
Jan 4, 2016
திருச்சி திருவெரம்பூர் பகுதி பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை அரசு கொறடா வழங்கினார்
வரும் பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு பகுதிகளில்
இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதேபோல் திருச்சிமாவட்டம். திருவெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 63,64,65 ஆகிய வார்டுகளை சேர்ந்த 5600 பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மற்றும் கட்சி நிர்வாகிகள், பயனாளி பெருமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Jan 1, 2016
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார்.
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார்.
இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திற்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் கீழ் இந்த வைஃபை சேவைக்கான கட்டமைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்திற்கு முற்றிலும் இலவசமாக அளித்துள்ளது இந்த ஒப்பந்தத்தின் படி ஏற்கனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்களில் இத்தகைய வைஃபை சேவை தொடயங்கப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை க்வாட்ஜென் வயர்லெஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த கூடங்களில் நுழைந்த நுழைந்த உடனேயே வைஃபை சேவையை பயன்படத்த தொடங்கலாம் இந்த சேவைக்கான கட்டணம் முதல் 15 நிமிடங்கள் இலவசம் இலவச உபயோகத்திற்கு பின்னர் ஆன்லைன் மூலம் ரூபாய் 30. 50. 90. அல்லது ஒரு நாளைக்கு முழுமையாக இலவச மாக பெற ரூபாய் 150 செலுத்தி பெறலாம்.
இந்த வைஃபை சேவை துவக்கத்தின் மூலம் டிஜிட்;டல் இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்ற சர்தேச விமான நிலையங்களுக்கு இணையாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு உயர்தர இ;ண்டர்நெட் சேவையை அளி;க்க தொடங்கியுள்ளது.