Oct 5, 2014

60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 4வது மண்டலம் 56வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி தலைமையில், மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி முன்னிலையில் 60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில், குமரன் மகளிர் கல்லூரி தலைவர் வசந்தி, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்  ஆகியோர் ராமூர்த்தி, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ்,பூபதி, ரவிச்சந்திரன் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரசுதன், பழனிசாமி, தவசிமுத்து ஆகியோர் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள்



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம்  தலைமையில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை ஏ.எஸ்.தங்கவேலு, முன்னால் கவுன்சிலர் உமாதேவி,கிளை துணை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மண்ணரை பஸ் நிறுத்தம் அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 21வது வார்டு சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அமுதா வேலுமணி தலைமையில், மண்ணரை ஊராட்சி கழக செயலாளர் வேலுமணி, கிளை செயலாளர் பழனிசாமி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலையில் கே.எஸ்.தியேட்டர் எதிரில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

உண்ணாவிரத போராட்டம்

 
 
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்துமீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,ஊராட்சி கழக செயலாளர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் ஊராட்சி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

ஜெ.ஆர்.ஜான் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்




திருப்பூர் 26வது வார்டு எம்.எஸ்.நகர் மெயின் ரோட்டில்  மக்கள் முதல்வர் ஜெயலலிதா வை விடுதலை செய்ய கோரி 2ம் மண்டலத்தலைவர் ஜெ.ஆர்.ஜான் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தங்கமுத்து, செல்லம் தங்கவேல், அசோக்குமார், சாமி கணேஷ்,, பங்க் என்.ரமேஷ், தலைமை கழக பேச்சாளர்கள் தீக்கனல் விஜயகுமார், வெள்ளியங்கிரி, பாரதி பிரியன், நாகராஜ், வேங்கை விஜயகுமார், கனகராஜ், மளிகை மணி,  குருமூர்த்தி, பெரியசாமி, கோபால், துரை, லலிதா, ஜானகி, நாகவல்லி, சிதம்பரம், சுந்தரம், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கொண்டனர். 

பக்ரீத் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து


நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பக்ரீத் தின வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார். ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர். இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக கவர்னர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், புனிதமான பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆளுநர் வாழ்த்து இந்த தியாக திருநாள் மத நம்பிக்கை, ஒற்றுமை, நட்பு, சமாதானம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்தட்டும் என்றும் ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தியாக திருநாள் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். மனித நேயம் மத நல்லிணக்கம் இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார். ராமதாஸ் வாழ்த்து இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைத் தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தியாகச் செயல் உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும். இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார். வைகோ வாழ்த்து வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''ஈதுல் அல்கா எனப்படும் ஈகைத் திருநாள் பெருநாள் என்று இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தள்ளாத வயதில், பெற்றப் பிள்ளையைவிட கொண்ட கொள்கையாம் ஈமான் மிக உன்னதமானது எனக்கொண்டு அப்பிள்ளையை பலியிடத் துணிந்த நபி இப்ராகிம் அலையின் ஈகம்-தியாகம் என்றும் போற்றத்தக்கது அன்றோ! அனைவரும் சமம் அந்த ஈகத்தை நினைவுகூர்ந்து அரஃபா பெருவழியிலும், முஸ்தலிபாவிலும் இன, நிற, தேச மொழி எல்லைகளைக் கடந்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் எனக்கூடி வானமே கூரையாக மண்ணில் அனைவரும் சமம் என புனித இறுதிக் கடமையை நிறைவேற்றுவோர்க்கும், அந்த நினைவில் திளைத்தவண்ணம் அகிலமெங்கும் ஏக இறைவனை வணங்கியும், ஏழைகளுக்கு வழங்கியும், ஏழை மக்களுடன் இணங்கியும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இதய வாழ்த்துக்கள். சமூக ஒற்றுமை வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, சமய நல்லிணத்தையும், சமூக ஒற்றுமையையும் கட்டிக் காக்க சூளுரைப்போம் என இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்'' எனக் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக அதிமுக.வினர் உண்ணாவிரதம்

கோவை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக அதிமுக.வினர் உண்ணாவிரதம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது நாளாக அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு பூஜைகள், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனைமலை மாசாணியம் மன் கோவிலில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார் தலைமையில் அவரது மனைவி கலைச்செல்வி சாந்தலிங்க குமார் உள்பட 300–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு மிளகாய் அரைத்து வேண்டுதல் செய்தனர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் தங்கம் செந்தில், காளியம்மாள், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் பூங்கோதை துரைசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் அப்புசாமி, நகர செயலாளர் கோட்டூர் பாலு, ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி வாசு, ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கோட்டூர் குணசீலன், நில வங்கி தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு கடன் சங்க தலைவர் திருமலைசாமி, நடிகர் சூர்யகாந்த், மாவட்ட பிரதிநிதி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆனைமலை பெத்தநாயக்கனூரில் பஸ் நிலையம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் 150 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் 200 பெண்கள் உள்பட 1000–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிச்சி நகர அ.தி.மு.க. சார்பாக குறிச்சி நகர செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர், சுந்தரா புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில்குமார், வேணு கோபால், நிஜாம், கவுரி, சாவித்திரி, முன்னாள் எம்.எல்.ஏ. ரோகினி, பாலாஜி ராமகிருஷ்ணன், சற்குரு, குறிச்சி மரியா, தண்டபாணி, ரவி, சேகர், பழனிசாமி, பூக்கடை ரவி, அண்ணாதுரை, சிவசாமி, பிரகாஷ், ராஜேந்திரன், மகளிரணி பூங்கொடி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுக்கரை ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கோரி ஆபீஸ் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் மதுக்கரை பேரூராட்சி தலைவர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வக்கீல் கே.பி.காமாஜ், மருதாசலம், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், வக்கீல் காமராஜ், குறிச்சி மணிமாறன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
சூலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் சூலூர் ஒன்றிய தலைவர் மாதப்பூர் பாலு தலைமையில்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தோப்பு அசோகன்,தொகுதி செயலாளர் லிங்கசாமி, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் சண்முகம், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்,சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பூபதி, இருகூர் பேரூராட்சி தலைவர் பத்மசுந்தரி, மோப்பிரி பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் நகர செயலாளர் ஆனந்த குமார், ராதாமணி, சூலூர் பேரூராட்சி தலைவர் தங்கராஜ், செந்தில் குமார், அருகை ஜெகன், கந்தவேல், மீரா, சுப்ரமணியன், சூலூர் கந்தசாமி, ரமேஷ், கார்த்தி உள்பட கலந்து கொண்டனர்.
அவினாசி சேவூரில் கைகாட்டிபுதூரில் அ.தி.மு.க. வினர் தொகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது உண்ணாவிரத பந்தலில் இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் மாறன் தனது தலையில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினர் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
வால்பாறையில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.க.வினர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வால்பாறை அமீது தலைமையிலும் நகர செயலாளர் மயில்கணேசன் முன்னிலையிலும் உண்ணாவிரதம் இருந்தனர். கவுன்சிலர்கள் தனராஜ், நெல்லை செல்வன், மாலினி, பூங்கொடி, மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், நகர துணை செயலாளர் பொன் கணேசன், அம்மா பேரவை செயலாளர் நரசப்பன், பேரவை தலைவர் பாபுஜி, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை மூடீஸ் பகுதியில் இன்று கடைகளும் அடைக்கப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல், வடக்கு ஒன்றிய குழு தலைவர் செல்வி பத்மினி, ஆச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பழனிச்சாமி, நெகமம் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் 15–க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்தனர்.