Feb 7, 2022

திருச்சி மாநகராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் வனிதா பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் வனிதா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர்

11 வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று 11 வது வார்டுக்குட்பட்ட உறையூர் இந்திரா நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, சுபானியாபுரம், சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Feb 5, 2022

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் தீவிர பிரச்சாரம்

 



மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்      ஐம்பதாவது வார்டுக்குட்பட்ட  ஆலம் தெரு தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர் கூறுகையில் நான் பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்

 பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் நான் சேவை செய்யக் கடமைப் பட்டுள்ளேன் அரசு சலுகைகள் ஆன அரசு இடமிருந்து பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவைப்பட்டாலும் தொடர்ச்சியாக  பொது மக்களுக்கு பெற்றுத் தருவேன் 

என்னை பொது மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்களில்  ஒருவராக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்     இந்நிகழ்வின் போதுவட்ட செயலாளர் .சுந்தர் வடிவேல் .ரபிக். மாவட்ட.மீனவரணி பொருளாளர்சரவணன் . பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ரவி பகுதி துணைச் செயலாளர் முத்துக்குமார் நவ்ரோஜ் அபுதாகிர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்

Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.

திருச்சி மாநகரம் 11-வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வனிதா போட்டி

 திருச்சி

திருச்சி  அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் 11ஆம் வார்டு கவுன்சிலராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வனிதா கூறுகையில் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ச்சியாக செய்து வருகிறேன்


தற்போது கவுன்சிலராக போட்டியிடுகிறேன் ஏற்கனவே மக்களுக்கு கவுன்சிலராக நான் பணியாற்றியுள்ளேன் அதேபோன்று கவுன்சிலராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது வார்டு மக்களுக்கு சேவை செய்ய என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் அரசு சார்பில் கிடைக்கப் பெறும் அனைத்து சலுகைகளையும் எனது வார்டு மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்தார்


Jan 17, 2022

திருச்சி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

 திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


சோமரசம்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுஅதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டை குழுமணி ஜீயபுரம் பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல இடங்களில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .   முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபி நடராஜன், மணிகண்டம் முத்துக்கருப்பன்  , நகர செயலாளர்கள், முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன், பேரூர் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை, வார்டு, பனையபுரம் கர்ணன், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

Dec 11, 2021

திருச்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய மகளிர் அணி இணைச் செயலாளர்

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நளை சிறப்பாக கொண்டாடிய 50 உட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி பருப்பு உணவு வகைகளை சேவை செய்த எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்


திருச்சி காஜா பேட்டை அருகில் 50 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு


மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்குஅரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை

முன்னாள்  அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பொது மக்களுக்கு வழங்கிய போது  அருகில் முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Aug 15, 2021

திருச்சி முத்தரசநல்லூர் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் சுதந்திர தின விழா

 


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா

முத்தரசநல்லூர்  அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா


கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட மெம்பர்  கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் முத்தரசநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி மக்கள் சேவையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதும் முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



Mar 27, 2021

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளர் புதிய திட்டம் அமுல் படுத்துவேன் வாக்குறுதி

 *ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பு விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும் குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் வாக்குறுதி* 


திருச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கம்பரசம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளருமான குப.கிருஷ்ணன் இன்றைக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

 *முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது* 

பொதுமக்கள் நலன் கருதி முத்தரசநல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி தருவதில் ஆதிசிவன் பெரும்பங்கு வகித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது 

அப்போது குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறும் பொழுது


அம்மா இருந்திருந்தால் என்ன செய்வார்களோ அந்த அத்தனையும் நான் செய்து தருகிறேன் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதித்துவெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்


மேலும் முத்தரசநல்லூர் ஊர் மக்களே அண்ணா திமுகதான் இந்த தொகுதியை வெல்வதற்கு எவரும் பிறக்கவில்லை


அடிப்படை வசதிகள் பஞ்சாயத்துக்களில் செய்து கொடுத்தாலும் தொகுதி மேம்பாட்டு களின் கீழ் புதிதாக 


திருச்சி விரிவாக்கத் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் வெற்றி பெற்ற பின்பு சட்டமன்றத்திலே பேசி அதற்கு ஒரு வடிவம் அமைக்கப்பட்டு சிறப்பு திட்டத்தின் கீழ்

அனைத்து விஸ்தரிப்பு பகுதிகளும் நடைமுறைப்படுத்தப்படும்


இந்தியாவிலேயே கார்ப்பரேட் கம்பெனி முதலீடு செய்யக்கூடிய இடம் தமிழ் நாடு தான்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எத்தனை தொழில் நிறுவனம் கொண்டுவந்தாலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தர முடியும்


திருச்சியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நான் தான் நாங்கள் எல்லா வேலையும் செய்து முடித்தோம் ஆனால் கருணாநிதி ஒரு பொட்டு வைத்து நாங்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி என்று பெயரிட்டோம் பெரியவர் தமிழ் கி ஆ பெ விஸ்வநாதன் பெயரை மாற்றி வைத்தார்கள் பொட்டு வைத்தவர்கள் எல்லாம் நம்முடன் குடும்பம் நடத்த முடியாது

தொலைநோக்கு பார்வையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக போய்க்கொண்டிருக்கிறது தமிழகம் என்று கூறினார்.

இந்நிகழ்வின்போது  பனையபுரம் கர்ணன் முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்