திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் .
இதை தொடர்ந்து இன்று மாலை முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வேட்பாளர் செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேட்டுப்பாளையம், மோருப்பட்டி, கவராப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
இந்த பிரச்சாரத்தின்போது தாத்தையங்கார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பேரூராட்சி செயலாளர் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் செம்மலை, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், அங்கமுத்து, மகாராஜன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் ரூபன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் கவி அரசு, தா.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய மகேந்திரன், தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், மேட்டுப்பாளையம், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுதாகர், ஒன்றிய துணைத் தலைவர் பொன்மனச்செம்மல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்ற வேட்பாளர் செல்வராஜ் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்