Mar 12, 2021

திருச்சி அதிமுகவினருக்கு தேநீர் பரிமாறிய மனிதநேய அமைச்சர்

 திருச்சி

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் தரிசனம் முடித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டீக்கடையில் கட்சிக்காரர்களுக்கு டீ, சாம்பார் விநியோகம் செய்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ர6ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சார வியூகங்கள் பலவிதங்களில் இருக்கும்.


இறுதி எஜமானர்கள் வாக்காளரகள் தான் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இத்தகைய பிரச்சார வியூகங்களை திட்டமிட்டு மேற்கொள்வார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்வது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது போன்ற பல்வேறு யுகத்திகளைக் கையாள்வார்கள்.

சாதாரண பாமர மக்களை கவரும் வகையில் இத்தகைய பிரச்சாரங்கள் அமையும்.

இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டால் வேட்பாளர் சாதாரணமான, எளிமையான நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும்.

இந்த வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் கலந்து கொண்டு விநாயகரை வணங்கிய வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை நுழைவு வாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் டீக்கடைக்கு கட்சியினருடன் டீ குடிக்க சென்றார்.

அவருடன் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் சென்றனர்.

அப்போது டீ கடையில் வேலை செய்யும் மாஸ்டர் டீ போட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி விநியோகம் செய்ய தயாராக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெல்லமண்டி நடராஜன், மாஸ்டரை கீழே இறங்கச் சொல்லிவிட்டுடீ பட்டறையில் ஏறினார்.

கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த டீயை கட்சியினருக்கு விநியோகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து டீக்கடை வாசலில் உள்ள பலகாரக் கடை கல்லா பெட்டியில் ஏறி நின்ற அமைச்சர், கட்சியினர் சாப்பிட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்களுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிட செய்தார்.

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு

 அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பிரம்மாண்டமான  வரவேற்பு


திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

 இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது,தொண்டர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து.வெல்லமண்டி நடராஜன் வரவேற்பளித்தனர்.

மேலும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பத்மநாதன் விமான நிலையத்திற்கு சென்று வெல்லமண்டி நடராஜன்  அவர்களை வரவேற்றார்

மேலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் ஜவகர் ,சுரேஷ் குப்தா, அன்பழகன்,கழக நிர்வாகிகள் மகளிர் அணி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Mar 11, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக தொண்டர்கள் வெள்ளத்தில்



ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்று வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதும் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் இருந்து கு.ப.கிருஷ்ணன் திருச்சி வந்தார்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு கு.ப.கிருஷ்ணன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி  பனையபுரம் கர்ணன் அதிமுக பிரமுகர்கள் மகளிர் அணி செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு அருள்வாக்கு

 திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாதன்   என்கிற வேட்பாளர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


அவர் புத்தூர் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக அதிமுக கட்சி பிரமுகர்களை சந்தித்தார் அப்போது இறை வழிபாடு நடத்தப்பட்டது .


திடீர்னு ஒரு நபர் பத்மநாதன் இடம் 11837 ஓட்டு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று  அதிமுக கட்சி சார்ந்த நபர் ஒருவர் இறை வாக்குறுதி அளித்தார்.

 இதனால் பரபரப்பாக காணப்பட்டது மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கோட்டையாக இருக்கும் நிலையில் இப்படி இறை வாக்குறுதியால் பரபரப்பு காணப்பட்டது. விரைவில் அதிமுக கோட்டையாக மாறும் என்ற மன உறுதியில் அதிமுகவினர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆலோசனை முகாம்

 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்


 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று இலவச  மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. 


ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

சிறுநீரக நோயுடன் நல்வாழ்வு வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் நேற்று (11 ஆம் தேதி) முதல் வரும் 13-ஆம் தேதி வரை இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சினைகள், ரத்த சுத்திகரிப்பு, பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரகம் திசுப்பரிசோதனை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், சிறுநீரகப் புற்றுநோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறுநீரக சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் வசதி உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் பா.குமார் அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி  திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ப.குமாருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ப.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மட்டுமின்றி, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த குமாருக்கு அதிமுக நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பட்டாசு வெடித்தும், மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வின் போது சகாதேவ பாண்டியன், இராவணன், கும்படி கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சிமண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரம் தொடங்கினார்

 சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார் பரஞ்சோதி


திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு தேர்தல் பணியை பரஞ்சோதி தொடங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பரஞ்சோதி தரிசனம் செய்தார்.தொடர்ந்து சமயபுரம் நால்ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ,ஒன்றிய செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி, மணிகண்டம் ஜெயக்குமார்,  சின்னையன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், இபி ஏகாம்பரம் புல்லட் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Mar 5, 2021

திருச்சி நீச்சல் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை

  திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில்  உள்ள நீச்சல் 


குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை  விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு 
அனுமதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல். 


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம் விளையாட்டரங்கில் உள்ள  நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு  
நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி அண்ணா 
விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது.

 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி 

மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள்  தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் விளையாட்டு 
உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில்  மேற்கொள்ளப்பட வேண்டும நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல் முககவசம் அணிதல் நீச்சல் குளத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.

வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள்  அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை 
செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் 
இயங்குவதற்கு அனுமதி இல்லை. 
விதிமுறைகளுடன்  பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கபடுவர்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இவ்வாறு தெரிவித்துள்ளார்

Jan 31, 2021

திருச்சி இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

 இந்தியன்ஆயில் நிறுவனம் நடத்தும் சக்ஷம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி



திருச்சி 31: சக்ஷம் என்பது PCRA எனப்படுகிற பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து புரிந்துணர்வு ஏற்படுவதற்காக நடத்தும் ஒரு மாத கால பரப்புரையாகும். இந்த ஆண்டு, இந்த பரப்புரை, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15, 2021 வரை "



பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்" என்கிற கருப்பொருளில் நடத்தப்பட்டு வருகிறது.



சக்ஷம் 2021 பரப்புரையின் ஒரு பகுதியாக, இந்தியன்ஆயில் நிறுவனம், திருச்சியில் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சைக்கிள் பேரணி, ஆர்டிஓ மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் விசுவநாதன் அவர்களால் இந்தியன் ஆயில், துணை பொது மேலாளர் பாபு நாகேந்திரா, இந்தியன் ஆயில் முதன்மை பகுதி மேலாளர் ராஜேஷ், லூப்ஸ் டெக்னிக்கல் சேல்ஸ் மேலாளர் ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 200 ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இந்த சைக்கிள் பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.


குடிமக்கள் இடையே எரிபொருள் சிக்கனம் பற்றியும் செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்துவதும் நோக்கமாகும். அதனால், பசுமையான சூழல் உருவாக ஏதுவாகும் என்பதோடு உடல்நலம் மேம்படும்.


இந்த பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏழு விஷயங்கள் குறித்தும் பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்படும்.


இந்த ஆண்டு சக்ஷம் பரப்புரை நோக்கங்கள் :


1. கேஸ் அடிப்படையிலான பொருளாதாரம்


2. பூமியின் கீழ் கிடைக்கும் எரிபொருள்களைத் தூய்மையான முறையில் உபயோகித்தல்


3 பயோ - எரிபொருள்களில் தனிச்சிறப்பு கவனம்


4. 2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 450 GW ஆக ஆக்குதல்


5. கரியமில வாயு சார்ந்த போக்குவரத்தை நீக்கும் முன்முயற்சி


6. ஹைட்ரஜன் போன்ற எரிபொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்


7. ஆற்றல் சார்ந்த சிஸ்டம்களில் டிஜிட்டல் நவீனத்துவம்


PCRA அமைப்பும் இந்தியன்ஆயில் உள்ளிட்ட ஆயில் & கேஸ் நிறுவனங்கள், இந்த ஒரு மாத பரப்புரை காலத்தில் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மேக்கொள்ளும். 'சக்ஷம் சைக்கிள் நாள்', சைக்கிள் பேரணி, வர்த்தக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான பயிலரங்கம், இல்லத்தரசிகள் / சமையல் கலைஞர்களுக்காக எளிதான எரிபொருள் சிக்கன நடைமுறை குறித்த கருத்தரங்கு ஆகியவை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.