சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார் பரஞ்சோதி
திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு தேர்தல் பணியை பரஞ்சோதி தொடங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பரஞ்சோதி தரிசனம் செய்தார்.தொடர்ந்து சமயபுரம் நால்ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ,ஒன்றிய செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி, மணிகண்டம் ஜெயக்குமார், சின்னையன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், இபி ஏகாம்பரம் புல்லட் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.