Aug 10, 2017

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி



திருச்சியில் கதர்ஆடையை பிரபலப்படுத்தும்வகையில் விசைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார், ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.

கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணியவேண்டும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறது, இதனடிப்படையில் திருச்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர் வாங்குவோர் சந்திப்பு மற்றும் விசைத்தறி ஆடைகள் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பங்கேற்று தொடங்கிவைத்து, கதர்ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். இதில் 15அரங்குகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் கதர்ஆடை நெசவாளர்களின்; ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு ரகத்தினாலான உடைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயனுறும்வகையில் உற்பத்தி விலைக்கே நேரடி விற்பனை செய்யப்படுவதால், இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான ஆடை ரகங்களை தேர்வுசெய்துவருகின்றனர்.

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி
மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேரடி சந்திப்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஆட்சித் தலைவர் ராஜாமணி துவங்கி வைத்தார்

Aug 3, 2017

திருச்சி 02.08.17ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு

திருச்சி             02.08.17  

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு .



திருச்சி ரயில்வே ஜங்சன்  நடைமேடை (பிளாட் பார்ம்) டிக்கெட் ரூபாய் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய  வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் (TTV தினகரன் ஆதரவாளர் ) ராஜராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு .தமிழகத்தில் மிக முக்கியமான நகரம் இது பாரம்பரியமான இரயில்வே ஸ்டேஷன். இங்கு அதிகபடியாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக வருகின்ற இடம் வயதானவரை விடுவதற்குக்கும் மற்றும் பள்ளிக்கு குழந்தை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவி கலைவிடுவதற்கும் அவர்களது தாய்மார்கள் வந்து பிளாட்பாரத்தில் விடுவதன் அவசியம் உள்ளதாலும் இதனை மனதில் கொன்று பிளாட்பார்ம் விலையினை குறைக்க வேண்டும்



திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் திமுக எம்பி சிவா ஆகியோர் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என  குற்றச்சாட்டு தெரிவித்தார்.

திருச்சி மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று திருச்சி ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்ற

மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது



தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.



2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்



4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்




5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது

Jul 31, 2017

திருச்சி 30.7.17 திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

திருச்சி 30.7.17

திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் சோமரசம் பேட்டையில் நடைபெற்றது
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அம்மாவழியில் நடக்கும் நம் தலைவரும் கூடிய விரைவில் முதலவர் நாற்காளியில் அமரப்போகும் ;அண்ணன்ஒபிஎஸ் அவர்கள் தலைவர் எம்ஜிஆர் மீது அவளவற்ற பற்று கொண்டவர் என்பதன் உதராணம் ஒன்று கூறுகிறேன் தலைவர்100 ஆண்டு விழாவை வழியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படம் பதித்த நாணயம் வெளியிட வழியுறுத்தி பாரத பிரமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணன் ஒபிஎஸ் என்றும் மீண்டும்ஒரு உதாரணம் அண்ணன் ஒபிஎஸ் விரைவில் முதல்ஆகிறார்என்பதற்;கு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல்களாம் அவர்களின் நினைவிடத்திற்கு வந்த பாரதபிரதமர் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் ஒபிஎஸ் அவர்களை சந்தித்து 15 நிமிடம் பேசியுள்ளார் அதன் எதிரொலி அண்ணன் ஒபிஎஸ் விரைவில் தமிழக முதல்வர் ஆகப்போகிறார் என்பது கூடிய விரைவில் n தரியும் என்றார்
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பூனாட்சி அம்மா வழியில் ஒபிஎ ஸ் அண்ணன் அவர்களுக்கு வழுசேர்க்கும் அளவிற்கு கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி வழுசேர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்மற்றும் பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் முன்னாள்அமைச்சர்கள் பரஞ்சோதி பூனாட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினாகள் மற்றும் மகளிர் அணி சார்பில் முன்னாள் மறைந்தஅமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி மரியம் பிச்சை ஸ்ரீரங்கம் பகுதி பிரேம் ஆனந்த்ääசெல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2017

திருச்சி – 25.07.17 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது

திருச்சி – 25.07.17

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார். இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி இன்று மாலை ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின்;போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார். வஸ்திரமரியாதை யாவும் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இதனை எடுத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பேட்டி : திரு.சுந்தர்பட்டர் - ஸ்ரீரங்கம்கோவில்

Jul 23, 2017

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 22.07.2017(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  விழாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் துறை இயக்குநர் முனைவர்   எ. இளையபெருமாள் பல்கலைக்கழக தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 13 மாணவ மாணவியருக்கு பட்டம் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ்விழாவில்; 962 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசியதாவது:  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்;களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் 60மூ பேர் மட்டுமே தேர்வுளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்கள் வாழ்க்கை விதத்தையும் வேலை வாய்ப்புகளையும் மற்றும் சமுதாய சிந்தனையும் கொண்டு வாழ வேண்டும் என வலியுத்தினார். தேர்வுகளை எதிர்கொள்ளும் 60மூ மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தார். அதில் முதல் 20மூ பேரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு எழுதுவது என்று கூட தெரியாதவர்கள் அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்;த 20மூ பேர்; படிப்பு சார்ந்த அறிவு சிறிதுமின்றி தங்கள் துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலைக்கு செல்கின்றனர். கடைசி 20மூ பேர் நல்ல அறிவுத்திறன்இ தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறந்த வேலையை பெறுகின்றனர். ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் எண்ணமும் என்னவெனில் எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் அதிகார மிடுக்கோடும் ஆளுமைதிறனோடும் வாழவேண்டும் என்பதே ஆகும். மேலும் தன்னுடைய உரையில் அறிவும் திறமையும் பெற்றிருந்தால் இந்த உலகமே உங்களுடையது என்றார்.  
சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்;க்கையே உதாரணமாக மாணவர்களிடையே கூறி சாதனையாளர்கள் அனைவருமே வசதியான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் அல்லர். பெரும்பான்மையான சாதனையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மற்றும் நல் அறிவும் போதுமானவை ஆகும். 
இன்றைய மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கும் தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உங்கள் பெற்றோர்களையும்  நீங்கள் கல்வி பயின்ற கல்வி கூடங்களையும் மறந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாவச்செயல் என்றார். தன்னுடைய உரையை இறுதியாக ஒரு தமிழ் கவிதையுடன் அழகாக முடித்தார். 
அக்கவிதை “அரிது அரிது மானிடராதல் அரிது… எனக்கூறி அப்பேர்பட்ட மானிடப்பிறப்பை பெற்ற நாம் அதன் கடமையை செவ்வேனே செய்வோம் என மாணவர்களை வாழ்த்தி தன் சிறப்பு உரையை இனிதாக முடித்தார். பட்;டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Jul 22, 2017

திருச்சி ருத்ர சாந்தி யோ காலயம் சார்பில் மாணவி சாதனை

 திருச்சி           22.7.17

சூரிய நமஸ்கார பயிற்சியில் திருச்சி மாணவி உலக சாதனை. ருத்ர சாந்தி யோகாலயம் சார்பில் 2.3 அடி ஆழ நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்காரம் யோகப் பயிற்சினை 40நிமிடங்களில் 1440 நிலைகளை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் அருகே  நடைபெற்றது.

திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஷ்மி நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்கார யோகப் பயிற்சினை செய்து உலக சாதனை செய்தார். இச்சாதனையை பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ருத்ர சாந்தி யோகாலய நிறுவனர் யோகரத்னா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு முதன்மை நடுவராக முனைவர் அசோகன் மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Jul 19, 2017

திருச்சி சமூக நலத்துறை

திருச்சி 19.7.17
திருச்சி சமூக நலத்துறை சார்பில் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்களுக்கு என்ன சட்ட என்பதை விளக்க விழிப்புணர்வு முகாம்மத்திய பேருந்து நிலையம்அருகே உள்ள தனியாhபள்ளி; அரங்கில்நடைபெற்றது
அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறித்த விளக்க உரைகள் பங்கு பெற்ற பெண்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்த முகாம் தமிpழகத்தில் 5 மாவட்டகளில் ஒரு மாவட்டமாக திருச்சியில் ஒரு பகுதி நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியை சட்டக்ஆலோசனை மையத்தின் செயலர் கீதா துவங்கி வைத்தார். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் கௌரி விளக்கமளித்தாh.;இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நலத்துறை அதிகாரி உஷா ராணி அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது