Feb 26, 2015
Feb 25, 2015
ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் முதல் பூஜையாக ஜெயலலிதா பெயரில் மகா பூஜை செய்யப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதற்காக 67 தேங்காய்கள், 67 வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜா, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பசுமலை கூட்டுறவு சங்க தலைவர் ஐ.பி.எஸ். பாலமுருகன், மதுரை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் வக்கீல் முனியாண்டி, கவுன்சிலர்கள் முத்துக்குமார், சந்தியா பலராமன், நகர தலைவர் ராசு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், நகர செயலாளர்கள் பாலமுருகன், பன்னீர் செல்வம், மரக்கடை முருகேசன், பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் தெய்வம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகராஜன், மகாதேவன், மாயி, பேரவை துணைத் தலைவர் ஒச்சாத்தேவர், சுமதி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநகர் 8–வது பஸ் நிறுத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.
திருநகர்– தனக்கன்குளம் பிரிவில் உள்ள பாலர் இல்ல மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உணவு வழங்கினார். தனக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் கருத்தக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் செல்லக்கண்ணு, வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், கோபால், சூரி, விளாச்சேரி பஞ்சாயத்து துணைத்தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட 67 இடங்களில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை
கூடல் நகரில் அ.தி.மு.க.வினர் ஏழைப் பெண்கள் 67 பேருக்கு இலவச சேலைகளை
வழங்கினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தலைமைக் கழகத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு திரண்ட மகளிரணியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதுதவிர அனைத்து பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு வகையில் பிறந்தநாள் விழாவை அந்த வகையில், மதுரை மாநகர் 1-வது வார்டு கூடல் நகரில் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.தனபாலன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் 67 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. இதுதவிர ஆயிரம் பேருக்கு சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குண்டுசேகர், சண்முகம், கே.மாரியப்பன், சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவில் தங்க ரதம் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் எம்.எல். ஏ.க்கள் முத்து ராமலிங்கம், தமிழரசன் இழுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு அழகர்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தங்க ரதத்தினை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜபார் மற்றும் அ.தி.மு.க.வினர் இழுத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உசிலம்பட்டி மகேந்திரன், பாண்டியம்மாள், மேலூர் நகராட்சி தலைவர் சரவணன், யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், அ.வல்லாளப்பட்டி சேர்மன் உமாபதி, கொட்டாம்பட்டி யூனியன் வைஸ் சேர்மன் குலோத்துங்கன், தொகுதி செயலாளர் வலையபட்டி தலைவர் செல்வம் என்ற பெரியபுள்ளான், அலங்கா நல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முரு கேசன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்.
மாணவரணி மாணிக்கம், அண்ணா தொழிற் சங்க செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நரசிங்கம்பட்டி ஓடையன், சூரக்குண்டு துரை அண்ணா, கிடாரிப்பட்டி சுரேஷ் என்ற கோயிலான், திருவாதவூர் சசிகலா மோகன், புதுச்சுக்காம்பட்டி சிவசொக்கனான்டி, துணைத்தலைவர்கள் தர்மராஜ், ஆசாத்தான், கண்ணன், விவேகானந்தன், கொட்டாம் பட்டி ஒன்றிய கவுன்சிலர் அய்யாபட்டி நயினான், கூட்டுறவு சங்க தலைவர்கள், மேலூர் நிலவள வங்கி தலைவர் பாலகிருஷ்ணன், சுக்காம்பட்டி ராசு, கீழையூர் வேலு, அ.வல்லாளபட்டி தலைவர் அசோகன், சொக்க லிங்கபுரம் காதர்ஷா, கொட்டாம்பட்டி பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அட்டப் பட்டி முத்தலீபு, வாசுகி சின்னகருப்பன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர் அனைத்து சதியில் இருந்தும் விரைவில் விடுபடுவார்: வக்கீல் பசும்பொன் பாண்டியன் பேச்சு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை காளவாசலில் இன்று அ.தி.மு.க. தொழிற்சங்க இணைச் செயலாளர் வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் தலைமையில் 67 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க துணைச்செயலாளர் பூக்கடை முருகன், ராஜசேகர், திருமுருகன், அரசரடி மு.சண்முகம், போஸ், போஸ், வாபர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பசும்பொன் பாண்டியன் பேசியதாவது:–
தமிழர்களின் உணர்வாக, உயிர் மூச்சாக, அரணாக மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்ந்து வருகிற அம்மா அவர்களின் பிறந்த தினத்தில் அகிலமே ஆர்த்தெழுந்து, ஆர்ப்பரிப்புடன் உள்ளம் உவகையோடு கொண்டாடி வருகிறது. தனக்கென வாழாமல் தமிழர்கள் தரணி யெங்கும் தலை நிமிர்ந்து வாழ்ந்திட தன்னையே அர்ப்பணித்து வாழ்கிற தங்கத்தாரகை அம்மாவின் பிறந்த தினத்தில் தாய் தமிழகமே சீரும், சிறப் போடும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு உடனடி தேவையாக கிப்ட் பாக்ஸ் மூலம் தேவையை நிவர்த்தி செய்தததை தாய்மார்கள் அம்மாவை உளமாற வாழ்த்துகிறார்கள். வயோதிகர்களும், கர்ப்பிணிகளும், கணவரால் கைவிடப்பட்டோரும் அம்மா அவர்களின் அற்புத திட்டத்தால் அபார பயன் அடைந்து இதய சக்தியோடு அம்மாவை வாழ்த்துகிறார்கள்.
நீதிக்குத்தண்டனையா? என்று அறம் சார்ந்தோர் வருந்தி அம்மா அவர்கள் அனைத்து சதியிலிருந்தும் விடுபட்டு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் அரியணையில் மீண்டும் அமர்ந்து நல்லாட்சி தருவார் என்று நல்லோர் இதயங்கள் அம்மா அவர்களை உலக தமிழினமே வாழ்த்தி வணங்குகிறது.
நாளைய உலகிற்கு அம்மா வழிகாட்டியாக சமூக விஞ்ஞானியாக பரிணமிக்க உள்ளார்கள். அம்மா காலத்தில் நாம் வாழ்ந்ததே நாளைய சரித்திரமாக மாற உள்ளது. அம்மாவின் தலைமையில் சாதனை படைப்போம். அம்மாவை வாழ்த்துவோம், வணங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்ட
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மதுரை மாநகராட்சியில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ 67 அடி நீள கேக்கை வெட்டினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சிறப்பு கவுன்சில் குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்ட மன்ற அரங்கின்வெளியே 67 அடி நீளமுள்ள பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. அதனை மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெட்டினார்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை மேயர் திரவியம் உறுதிமொழி வாசித்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். கமிஷனர் கதிரவன், மண்டலத் தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், சண்முகவள்ளி, நிலைக்குழு தலைவர்கள் முத்துக்கருப்பன், சுகந்தி அசோக், முனியாண்டி, கவுன்சிலர்கள் முருகேசன், ராஜீவ்காந்தி, கேசவ பாண்டியம்மாள், அனுராதா, கார்னர் பாஸ்கரன் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி எல்கையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்குவது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இளைஞர் மேம்பாட்டு மையம் தொடங்கி அதன் மூலம் உயர்கல்வி மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, கலை மேம்பாட்டு பிரிவு போன்றவற்றை அரசு மானியத்துடன் ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜெயலலிதா பிறந்தநாள்: அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை- அன்னதானம்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில்
சர்வ சமய பிரார்த்தனை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாள் மதுரையில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஜெயலலிதா நீடூழி வாழவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அங்குள்ள நந்தவனத்தில் மா, வில்வ மரக்கன்றுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. தெற்கு 2–ம் பகுதி சார்பில் 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
பின்னர் கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணாநகரில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பேருக்கு மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள 76 வார்டுகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இனிப்பு வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்கமோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 26–ந் தேதி நடக்கிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். மேலும் அனைத்து பகுதி, தொகுதி, வட்டங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா பள்ளிவாசலில்
அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா கவுன்சிலர் மற்றும் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர்சார்பில் திருச்சி நத்தர்சா பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி சுரேஷ் குப்தா கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Feb 24, 2015
அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு
அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திர கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா பல்லாண்டு வாழ வெள்ளி தேர் தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி சுரேஷ் குப்தா மருத்துவரணி டாக்டர் சுப்பையா மகளிரணி டாக்டர் தமிழரசி கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்