Jan 20, 2015

திருப்பூரில் எம்.ஜி.ஆரின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ விசாலாட்சி தலைமையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பின்னர் அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு திரண்டிருந்த அண்ணா தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றரை கோடி தொண்டர்களையும், இந்த நாட்டையும், நம்மளையும் வாழவைத்து அழகு பார்க்கும், எப்பொழுதும் அண்ணா தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி வரும் ஜெயலலிதா அவர்களை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் மகத்தான மக்கள் சக்தியுடன் மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல்,அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,4-வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ்.பழனிசாமி, உகாயனூர் ஊராட்சி தலைவர் பழனிசாமி, மகளிர் அணி சித்ராதேவி, தம்பி மனோகரன், வளர்மதி கருணாகரன், அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார்,ராஜேஷ்கண்ணா, எஸ்பி.என்.பழனிச்சாமி, டி.பார்த்தீபன், ஹரிஹரசுதன், கவுன்சிலர்கள் செல்வம்,புலவர் சக்திவேல் சின்னசாமி, வேலுசாமி, ராஜகோபால், பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், லோகநாதன்,பரமராஜன், நகர நிர்வாகிகள்  ரத்னகுமார், மாணவரணி மாரிமுத்து,மயில்ராஜ், வளர்மதி கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சாகுல்அமீது, ராயபுரம் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், கிளை செயலாளர் விவேகானந்தன்,ஹனிபா, மூர்த்தி, பனியன் சங்க குணசேகரன்,கேபிள் பாலு,பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, நீதிராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.மில் தேவராஜ், வினோத்குமார்,முபாரக், சி.டி.சி.அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார், சிவகுமார், மாரிமுத்து, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் வேங்கை விஜயகுமார், பாரதிபிரியன், சாரதா மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநகர் பகுதியில் உலா 60 வவார்டு கிளை சார்பில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்க்கபப்ட்டன.98 லிட்டர் பால் வழங்கும் விழா:- 
        திருப்பூர் 31-வது  வார்டு வாலிபாளையம் கிளை கலக்கம் சார்பில் மற்றும் கே.பி.என்.காலனி முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 98 பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு பால் வழங்கியும், பொங்கல் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பி.கே.எஸ்.சடையப்பன், வெங்கிடுபதி, கிளைசெயலாளர் ரவிகுமார், மோகன், கிருஷ்ணன், பாலன், வேலாயுதம், வெங்கடேஷ், சந்தானம்,, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், தாமோதிரன், உண்ணி கிருஷ்ணன், சிவக்குமார், சதீஷ், சிவசக்தி, கதிரேசன்,  சசிகுமார், மகேந்திரன், லட்சுமணன், நிவேந்திரன், நிவாஸ்,மணிகண்டன், பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



திருப்பூரில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் 1000 லிட்டர் பால் வழங்கிய துணை மேயர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் 3 பகுதிகளிலும் மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாலிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு 500 லிட்டர் பால் மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை துணை மேயர் வழங்கினார். இத்துடன் கே.பி.என்.,காலனியில் இனிப்பு மற்றும் முள்ளுக்காடு பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி, அந்த பகுதி மக்களுக்கு 500 லிட்டர் பால் என மொத்தம் 1000 லிட்டர் பால் தானம் வழங்கினார். 
இந்த விழாவில் கலந்து கொண்டு துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
   மக்கள் திலகம் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்., மக்களுக்காகவே வாழ்ந்தார். தனது வீட்டை காதுகேளாதோர் பள்ளிக்கு வழங்கினார். தனது சொத்துக்களை தன்னுடன் உழைத்தவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்தார். இந்திய நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொண்டாடும் அவரது பிறந்தநாளை கொண்டாடும் தலைவரான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை இந்த் பகுதியில் 25 ஆண்டுகளாக நாம் பால் வழங்கி கொண்டாடி வருகிறோம். இன்றைக்கு எம்.ஜி.ஆர் வழியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது தலைமையில் இயங்கி கொண்டிருக்கிற இயக்கம் அண்ணா தி.மு.க., நாம் என்றும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார். 
     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பி.கே.எஸ்.சடையப்பன், வெங்கிடுபதி, கிளைசெயலாளர் ரவிகுமார், மோகன், கிருஷ்ணன், பாலன், வேலாயுதம், வெங்கடேஷ், சந்தானம்,, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், தாமோதிரன், உண்ணி கிருஷ்ணன், சிவக்குமார், சதீஷ், சிவசக்தி, கதிரேசன்,  சசிகுமார், மகேந்திரன், லட்சுமணன், நிவேந்திரன், நிவாஸ்,மணிகண்டன், பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 14, 2015

திருப்பூரில் நடந்த போக்குவரத்து வார விழாவின் 2வது நாளான இன்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து  நடத்திய  26வது சாலை பாதுகாப்பு வார விழா  பழைய பஸ் நிலையத்தில் 2வது நாளான இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, மாவட்ட செய்தி மக்கள் தொடபு துறை மூலம் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை  விளக்க மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியினை பார்வையிடு பேசினார். பின்னர் பேருந்துகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஓட்டினார்.
இந்த நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தங்கினார். எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர்  எம்.சண்முகம், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வீரபாண்டி வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவர் மார்க்கெட் நா.சக்திவேல்,வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் ( வடக்கு), பால்ராஜ் (தெற்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், அய்யாசாமி, கவுன்சிலர்கள்  சண்முகசுந்தரம், கலைமகள் கோபால்சாமி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், லோகநாதன் மற்றும் சுபாஷ், சத்துருக்கன், சக்திவேல், செந்தில்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Jan 12, 2015

திருப்பூர் அருகே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்தை நல்லாசி நடத்த வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் ருத்ர யாக பூஜை நடைபெற்றது




திருப்பூர் அடுத்துள்ள அழகுமலை வானவஞ்சேரியில் கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன் கூண் பாண்டி மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியநாயகி உடனமர் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில்அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, கூட்டணி கட்சியான மாவீன் தீரன் சின்னமலை பேரவை சார்பில் பெரியநாயகி ஸ்ரீ ருத்ரயாகம்‘ நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவீரன் தீரன் சின்னமலை பேரவை மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி தலைமை தங்கினார்.மாநில தலைவர் வி.கே.முருகேசன், கௌரவதலைவர் கே.எம் முருகேசன், பொருளாளர் எஸ்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.செயலாளரும், வனத்துறை அமைச்சருமான் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ருத்ர யாக பூஜைகளை நடத்தி வைத்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகளிர் அணி மாநில துணை செயல்லாரும், மேயருமான் அ.விசாலாட்சி, எம்.எல்.ஏ.,க்கள் சண்முகவேலு, நடராசன், பொன்னுசாமி, சத்யபாமா எம்.பி., துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவச்சலம், பல்லடம் தொகுதி செயலாளர் லோகநாதன், நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, உகாயனூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனிசாமி, ஜெயஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி தாளாளர் கே.எம்.தங்கராஜ், கவுன்சிலர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் சிவசுப்பிரமணி, மாநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்பி.என் பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், அர்ஜுனன்ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவ பெருமானை வேண்டி மனமுருகி எஸ்.எம்.பரமசிவ குருக்கள் தலைமையில் 8 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாக பூஜைகளை   நடத்தினர். 

Jan 4, 2015

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள நந்தவனபாளையத்தில் தமிழக அரசின் விலையில்லா

பொங்கல் வேஷ்டி, சேலைகளை சட்டபேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ.,மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

திருப்பூர் அண்ணா தி.மு.க..,வழக்கறிஞர் அணி சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அழகுமலை கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடுதலையாகி தமிழக முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேண்டி திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார தண்டாயுதபாணி திருக்கோவிலில் அபிஷேக அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மகளிர் அணி மாநில  துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு பூஜையில் விக்னேஸ்வரா பூஜை, பஜ்சகவியா பூஜை, புண்ணியஜனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ஆயுசு ஹோமம், பூர்ணசகி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றியகுழு தலைவர் சிவாச்சலம், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல் பாபு, அவினாசி ஜெகதாம்பாள், கொடுவாய் லோகநாதன், பல்லடம் நகராட்சி துணை தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, தம்பி  மனோகரன், அட்லஸ்  லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, அய்யாசாமி,கிருத்திகா சோமசுந்தரம் கருணாகரன்,கோமதி சம்பத், சாகுல் ஹமீது, தனபால், தஹ்ங்கமுத்து, ஏ.கண்ணப்பன், ராஜ்குமார், மணிகண்டன், யுவராஜ் சரவணன், சடையப்பன், நீதிராஜன், கவுன்சிலர்கள் சண்முகம்,பேபி தர்மலிங்கம்,ஆகியோர்  உள்ளிட்ட  மாமன்ற உறுப்பினர்கள், கிரிதரன், அர்ஜுனன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்  வெள்ளியங்கிரி, தங்கவேல் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இன் தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றும் பொதுமக்களுக்கு முடிவில் அன்னதானம் வழங்கபட்டது.

திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியில் 7 ஆயிரம் பேருக்கு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றிய குழு பெருந்தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியிகளில் உள்ள பெருமாநல்லூர், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம் உள்ளிட்ட  8 ஊராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பண்டிகை விலையில்லா வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காளிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் பொன்னுலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் தமிலீஸ்வரன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றியகுழு பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் பயனாளிகளுக்கு வேஷ்டி,சேலைகளை வழங்கி சிறப்புரையாறினார். 
   இதே போல் மற்ற ஊராட்சிகளுக்கும் சென்று சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கினார். விழாவில் ஸ்ரீதேவி பழனிசாமி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா பழனிசாமி, கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர்கள் அய்யாசாமி, குமாரவேல், செயலாளர் பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் காளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நன்றி கூறினார்.

Jan 2, 2015

உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க சிறப்பு பிரார்த்தனை.இதையொட்டிஅம்மாவின் வேண்டுகோளின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V ஜெயராமன்,மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சி சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்C.மகேந்திரன்,நகர்மன்ற தலைவர் கே.ஜி.எஸ் ஷோபனா
,நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,கூட்டுறவு வீட்டமைப்பு சங்கத்தலைவர் வக்கீல் கண்ணன் ,நகர செயலாளர் கே.ஜி.சண்முகம் ,U .K P ராதாகிருஷ்ணன்,சிதம்பரம் 
,ex கவுன்சிலர்  குருவாயூரப்பன்,சாந்தி,செல்வி,எரிப்பாளையம்  மாலதி நடராஜ், பணியன் துரை ,மணிவண்ணன் ,குமரேசன், பஞ்சலிங்கம் ,வின்சென்ட்,ஊராட்சி மன்றத்தலைவர் தனபாக்கியம் கிட்டு  மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 

Jan 1, 2015

இந்தியாவிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் அம்மா வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு








திருப்பூர், ஜன. 1-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி பேசும்போது கூறியதாவது&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படும் இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது 54 வாக்குறுதிகள் அளித்தார்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார். எத்தணையோ பேர் முதல்வராக பொறுப்பேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அளித்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அம்மா அவர்கள் அளித்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் அம்மா அவர்கள். 
 இன்றைக்கு தமிழக மக்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்க காரணம் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்கள். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி, திருமண உதவியாக 4 கிராம் தங்கம், திருமண உதவி தொகை போன்ற நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார். மேலும் கல்விக்கா அதிக நிதி ஒதுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி தமிழகம் கல்வியில் முன்னேற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.
 மக்கள் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்துக்கும் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். என்றைக்கும் நீங்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 விழாவில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், அன்பகம் திருப்பதி,  கணேஷ், முருகசாமி,சண்முக சுந்தரம்,  சபரி, கனகராஜ், பாலன், ,மற்றும் கருணாகரன், நீதிராஜன், ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.