Jan 4, 2015
திருப்பூர் அண்ணா தி.மு.க..,வழக்கறிஞர் அணி சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அழகுமலை கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடுதலையாகி தமிழக முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேண்டி திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார தண்டாயுதபாணி திருக்கோவிலில் அபிஷேக அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு பூஜையில் விக்னேஸ்வரா பூஜை, பஜ்சகவியா பூஜை, புண்ணியஜனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ஆயுசு ஹோமம், பூர்ணசகி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றியகுழு தலைவர் சிவாச்சலம், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல் பாபு, அவினாசி ஜெகதாம்பாள், கொடுவாய் லோகநாதன், பல்லடம் நகராட்சி துணை தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசா மி, அய்யாசாமி,கிருத்திகா சோமசுந்தரம் கருணாகரன்,கோமதி சம்பத், சாகுல் ஹமீது, தனபால், தஹ்ங்கமுத்து, ஏ.கண்ணப்பன், ராஜ்குமார், மணிகண்டன், யுவராஜ் சரவணன், சடையப்பன், நீதிராஜன், கவுன்சிலர்கள் சண்முகம்,பேபி தர்மலிங்கம்,ஆகியோர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், கிரி தரன், அர்ஜுனன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, தங்கவேல் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இன் தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றும் பொதுமக்களுக்கு முடிவில் அன்னதானம் வழங்கபட்டது.
திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியில் 7 ஆயிரம் பேருக்கு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றிய குழு பெருந்தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியிகளில் உள்ள பெருமாநல்லூர், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம் உள்ளிட்ட 8 ஊராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பண்டிகை விலையில்லா வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காளிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் பொன்னுலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் தமிலீஸ்வரன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றியகுழு பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் பயனாளிகளுக்கு வேஷ்டி,சேலைகளை வழங்கி சிறப்புரையாறினார்.
இதே போல் மற்ற ஊராட்சிகளுக்கும் சென்று சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கினார். விழாவில் ஸ்ரீதேவி பழனிசாமி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா பழனிசாமி, கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர்கள் அய்யாசாமி, குமாரவேல், செயலாளர் பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் காளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நன்றி கூறினார்.
Jan 2, 2015
உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க சிறப்பு பிரார்த்தனை.இதையொட்டிஅம்மாவின் வேண்டுகோளின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V ஜெயராமன்,மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சி சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்C.மகேந்திரன்,நகர்மன்ற தலைவர் கே.ஜி.எஸ் ஷோபனா
,நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,கூட்டுறவு வீட்டமைப்பு சங்கத்தலைவர் வக்கீல் கண்ணன் ,நகர செயலாளர் கே.ஜி.சண்முகம் ,U .K P ராதாகிருஷ்ணன்,சிதம்பரம்
Jan 1, 2015
இந்தியாவிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் அம்மா வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு
திருப்பூர், ஜன. 1-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி பேசும்போது கூறியதாவது&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படும் இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது 54 வாக்குறுதிகள் அளித்தார்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார். எத்தணையோ பேர் முதல்வராக பொறுப்பேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அளித்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அம்மா அவர்கள் அளித்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் அம்மா அவர்கள்.
இன்றைக்கு தமிழக மக்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்க காரணம் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்கள். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி, திருமண உதவியாக 4 கிராம் தங்கம், திருமண உதவி தொகை போன்ற நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார். மேலும் கல்விக்கா அதிக நிதி ஒதுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி தமிழகம் கல்வியில் முன்னேற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.
மக்கள் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்துக்கும் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். என்றைக்கும் நீங்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், அன்பகம் திருப்பதி, கணேஷ், முருகசாமி,சண்முக சுந்தரம், சபரி, கனகராஜ், பாலன், ,மற்றும் கருணாகரன், நீதிராஜன், ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Dec 31, 2014
திருப்பூரில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும் ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும் ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர்.
இதே போல் பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேரில் சென்று இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னால் அமைச்சர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்., தாராபுரத்தில் கே,போன்னுசாமி எம்.எல்.ஏ.வும்,காங்கயத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ.,வும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புத்தாண்டு நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை
திருப்பூர்,டிச.31-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆபாமான கலை நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர்சேஷசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2014-ம் தேதி இரவில் உள் அரங்கினுள் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஆபாசமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நிகழ்த்த அனுமதியில்லை.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.
அரசு அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் மது வழங்கக்கூடாது.
தனியார் தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளங்களை 31.12.2014 இரவு 08.00 மணி முதல் 01.01.2015 காலை 06.00 மணி வரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 01.00 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது, எந்த ஒரு அசம்பாவிதமும் நடவாமல் இருக்கத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்க வேண்டும்.
புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்தும் வசதிகள் செய்திருக்க வேண்டும்.
நள்ளிரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் சென்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இசைக் கருவிகளையோ ஒலிபெருக்கிகளையோ அதிக ஒலியுடன் பயன்படுத்தக்கூடாது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தக்கூடாது.
தற்காலிகமாக அமைக்கும் மேடைகளுக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும்;இ தகுதிச்;சான்று பெறப்பட்டிருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மேடையில் ஆடுபவர்கள் மேடைகளின் இருந்து யாரும் கீழ் இறங்கி வர அனுமதிக்கக் கூடாது. கீழிருந்து யாரும் மேல் ஏற அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அனைத்தையும் ஊஊவுஏ கேமிராவில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
திருப்பூர் அரசு போக்குவரத்து பனிமனையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமிட்டு இன்றும்போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசி இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது துணை மேயர் சு.குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பொன்னுசாமி, கண்ணப்பன், ராஜேந்திரன், சரவணன்,ரவிகுமார்,கண்ணபிரான். ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்