Dec 31, 2014
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்
Dec 29, 2014
திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது.
திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது. கட்சியினர் அளித்த மனுக்களை கைத்தறி துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா , வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் பரிசீலனை செய்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று கட்சி நிர்வாகிகள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று (சனி ) கட்சி நிர்வாகிகள் விண்ணப்பம் அளித்தனர். திருப்பூர் குலாலர் கல்யாண மண்டபத்தில் ,கொங்கு மெயின் ரோடு பகுதி தேர்தலுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கணேஷ், முருகசாமி உள்ளிட்டோர பங்கேற்றனர். t
Dec 27, 2014
திருப்பூரில் நடந்த அமைப்பு தேத்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் தலைமை தங்கினார்.
மேயர் அ.விசாலாட்சி பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்.ராணுவ கட்டுப்பாட்டுடன் இந்த இயக்கத்தை மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார். அண்ணா திமு.க. இயக்கத்தில் மட்டுமே 1.1/2 கோடி தொண்டர்கள் உள்ளனர் .நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப் பவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது எந்த விதமான பு கார்களும் இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.மற்ற கட்சியைபோல் இல்லை அண்ணா தி.மு.க. மக்கள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் நாம் என்பதை நிருபிக்கும் வகையில் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.எல்.ஏ, க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.
மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சரு மான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக் கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நம் மாவட்ட கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்.. அவரது ஆலோசனையின்படி இந்த தேர்தலை அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். மக்கள் முதல்வர் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்திற்கு நியமிக்கபட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,பொங்கலூர் எஸ்.சிவாச்சலம், அவினாசி மு.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியம் கே.என்.விஜயகுமார், துணை மேயர் சு.குணசேகரன்,வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், அன்னூர் காளியப்பன், அவினாசி ராமசாமி, திருமுருகன் பூண்டி விஸ்வநாதன் உள்ளிட்ட நகர செயலாளர்கள் ஆகியோர்களுக்கு அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் நிர்வாகிகள் பாரங்களை வழங்கினர்.
கூட்டத்தில் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணி, மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், சிராஜ்தீன், வெ.அய்யாசாமி, வி.கே.பி.மணி, அட்லஸ் லோகநாதன், உஷரவிகுமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, அவினா சி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், அன்னூர் சௌகத் அலி, பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, சேவூர் வேலுசாமி, யு.எஸ்.பழனிசாமி, சில்வர் வெங்கடாச்சலம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கருணாகரன், கண்ணபிரான், பல்லடம் ஜோதிமணி, சித்ராதேவி, வைஸ் பழனிச்சாமி, சித்துராஜ், தர்மராஜன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், வசந்தாமணி, பிரியா சக்திவேல்,பேபி தர்மலிங்கம் நிர்வாகிகள் ராஜ்குமார், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, பரமராஜன் நீதிராஜன் மங்கலம் சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் அமைச்சர் தலைமையில் சிறப்பு பூஜை
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் கணபதி ஹோமம், மஹா அஷ்டபதி ஹோமம், தீபாதரணை மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் தலைமையில் சபரிமலை பெரும்பால திருமேனி தந்திரி ரஞ்சூ பூஜைகளை நடத்தி வைத்தார். பின்னர் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Dec 25, 2014
அண்ணா தி.மு.க.உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவைத் தலைவர் வி.பழனிசாமி, வடக்கு தொகுதி செயலளார் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசியதாவது:-
அண்ணா தி.மு.க., கட்சியின் விதிமுறைப்படி, 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை கொண்ட திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநகரம், மாவட்டம், ஒன்றியம், அனைத்து கிளைகள் என ஒவ்வொரு அமைப்பிலும் தலைவர், செயலாளர், இணை செயலாளர், 2 துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி அல்லது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் 3 என, மொத்தம் 9 வகையான பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். மேலு ம் தேர்தல் ஆணையாளர்களாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர்களும் நியமனம் செய்யபட்டுள்ளனர். எனவே, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அம்மா அவர்களால் நமது மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்த முதல் மாவட்டம் திருப்பூர் மாநகர் மாவட்டம் என்ற பெருமையை மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், கட்சிக்கும் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், வருகிற கட்சி அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது என்றும், திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக அதிக நிதி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டும், வருகின்ற 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வகையில் சிறப்பாக செயலாற்றுவது, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,கருப்பு சாமி, தொகுதி செயலளார்கள் தம்பி மனோகரன், சேவூர் வேலுசாமி, லோகநாதன்,சார்பு அணி நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளை யம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சிவாச்சலம், மு.சுப்பிரமணியம், நகர செயலாளர்கள் வி.கே.பி.மணி, ராமசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டவரக்ளும், சார்பு அணி நிர்வாகிகள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல்பாபு, ஆனந்தகுமார், சித்ராதேவி, ஜோதிமணி கிருதிகசொமசுன்தரம், வசந்தாமணி,அய்யாசாமி உள்ளிட் டவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் நன்றி கூறினார்.
திருப்பூரில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம்
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் கழக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலா ட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு ஒன்றிய செயலளார் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், எம்.மணி, சார்பு அணி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி யம், கரைபுதூர் நடராஜன், ஜோதிமணி, சித்ராதேவி, மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, வளர்மதி கருணாகரன் , சாகுல்ஹஅமீது, தாமோதரன், கண்ணன், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, கண்ணபிரான், வசந்தாமணி, பிரியா சக்திவேல், ரத்தினகுமார், ராஜ்குமார், ரஞ்சித்ரத்தினம், நீதிராஜன், பாசறை யுவராஜ் சரவணன்,லோகநாதன், பரமராஜன் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்குமேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம்எம்.மணி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், மண்டலத்தலைவர் கிருத்
Dec 23, 2014
திருப்பூரில் பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் விநியோகம்
திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கியும் கருணாநிதி ஆட்சியில் செய்த ஊழல் குறித்த துண்டு பிரசுரங்கள் நிகழ்ச்சி 22வது வார்டு கொடிக்கம்பம் அருகில் வார்டு கவுன்சிலர் கலைமகள் கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்,பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ். எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், சிறப்பு அன்னதானம் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் வடக்கு செயலாளர் ஜெ.ஆர்.ஜான், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,ஹரி கரசுதன், வளர்மதி கருணாகரன், சாகுல்அமீது , தாமோதரன், ரத்தினகுமார், அசோக்குமார்,காலனி செல்வராஜ், நீதிராஜன், கவுன்சிலர்கள் சபரிஸ்வரன், விஜயகுமார், ரங்கசாமி, கனகராஜ் புலவர் சக்திவேல், வேலுமணி, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன்,உள்ளிட்டவரக்ளும், ஜெகநாதன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் மகளிர் அணியினர், பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்