ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கேத்தனூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.93.27 லட்சம் மதிப்பில் 97 மாற்று திறனாளிகளுக்கான உபகரனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,பயனாளிகளு க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சிகளும் நிறைவேற்றிய வரலாறு இல்லை.ஆனால் இந்தியாவில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களும் ஜெயலலிதா அரசில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை நிச்சயம் பெற்று இருப்பார்கள்.அதற்கு உதாரணம் கேத்தனூர் ஊராட்சியில் அனைத்து கிராமங்களும் இன்று சிறப்பாக இருக்கிறது என்பதற்கும், இந்த ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்வதற்கும் காரணம் ஜெயலலிதாவின் திட்டங்கள்.அனைத் தும் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது அதை நீங்கள் உணர வேண்டும். அரசை தேடி மக்கள் சென்ற காலம் போய் ஜெயலலிதா வழி காட்டுதலின்படி இன்று மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது.
இந்த ஊராட்சியின் மந்திரிபாளையம் பகுதிக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும். முதியோர் ஓய்வூதிய தொகை 210 பேருக்கு இந்த கிராமத்தில் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் 17 ஊராட்சிகளில் ,2468 குடும்பங்கள் மேம்பட புது வாழ்வு திட்டம் வாய்ப்பு அளிக்கிறது. புது வாழ்வு திட்டம் மூலம் 11218 பயனாளிகள் பயன் பெற்று இருக்கிறநற். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தது ஜெயலலிதாவின் திட்டம் தான். ரூ.15.60 கோடி செலவில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 634 சுய உதவி குழுக்கள் பயன் பெற்றுள்ளது, இரு பாலருக்கும் இத்திட்டம் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
17 ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற வுடன் 1 லட்சம் பட்டாக்களும், அடுத்த ஆண்டில் 2 லட்சம் பட்டாக்கள் வழங்கவும் அறிவித்தார். நமது மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயித்தார். இது வரை 6 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.,
மாற்றுத்திறனாளிகளுக்கு , வாசிப்பாளர்களுக்கு இரு மடங்கு கல்வி உதவி தொகை, ஜெயலலிதா அறிவிப்பின்படி, அவரது வழி காட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மன நல காப்பகம் அமைக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதுவும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வண்ணம் செயபடுத்தும் அரசாக மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி செயல்படுகிற இந்த அரசு செயல்படுகிறது. என்றைக்கும் அவரது விசுவாசிகளாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், பொங்கலூர் ஒன்றியக் குழுத்தலைவர்
நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய தலைவர் எம்.கே.ஆறுமுகம்,கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், முருகசாமி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், புத்தரச்சல் பாபு, சித்துராஜ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரகுபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது,உதவி அலுவலர் பாலாஜி, மற்றும் ஏ.டி.பி.கிரிதரன், அர்ஜுன், பொது மக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..