Dec 7, 2014

திருப்பூர், பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வரும் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்


திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் யு.எஸ்.பழனிசாமி தலைமை தங்கினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், மாவட்ட கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். தலைமை ஆசிரியர்கள் கா.முருகேசன் (உயர்நிலைப்பள்ளி) சு.மனோகரன் (துவக்கப்பள்ளி) ஆகியோர் வரவேற்றனர். பட்டதாரி ஆசிரியர் சு.மாரிசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதத்தை அளித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது.என்படஹ்ர்ககவும், கல்வி கற்கதாதவர்கள் இருக்ககூடாது என்பதற்காக மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேறி கொண்டுள்ளது. இப்பள்ளியை மேல் நிலைப்பளியாக தரம் உயர்த்தவேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். 2014-15ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அதனால் அடுத்த கல்வி ஆண்டில் நிச்சயமாக இந்த பள்ளி தரம் உயர்த்தி தரப்படும். அதற்கான பூர்வாங்க பணிகளை கல்வி அமைச்சர் செய்து வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் 500 கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும் பள்ளி முன்பு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்கள். நிச்சயமாக விரைவில் நெடுஞ்ச்சலை துறை அதிகளிடம் பேசி விரைவில் பள்ளிக்கு முன்பு வேகத்தடை அமைத்து தரப்படும். 
மேலும் பள்ளிக்கு அரசு நிலம் இருக்கும் பட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.இப்பள்ளியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.வரும் எனவே, மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை பெற்று அவற்றை பயன்படுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம்  கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எஸ்.பி.லோகநாதன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கவுன்சிலர் கண்ணப்பன்,மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சரோஜினி, ஆசிரியர்கள் மஞ்சுளா, செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்சிகள் நடை பெற்றது.
முடிவில் பட்டதாரி ஆசிரியை ஏ.அனிதா நன்றி கூறினார். திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா பல்லடம்  புரபசனல் கல்லூரியில் நடைபெற்றது.திருப்பூர் அடுத்துள்ள பொல்லிகாளிபாளையம் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.



தொழில்துறையினருக்கு தமிழக அமைச்சர்கள் அழைப்பு

திருப்பூர் மாவட்ட சி.ஐ.ஐ., அமைப்பு,  தமிழக அரசின்  தொழில் துறை வளர்ச்சிக்கான கருத்தரங்கு காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஹோட்டலில் நடந்தது. 
கூட்டத்துக்கு சிஐஐ திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை தங்கினார்.சிஐஐ தமிழகத் தலைவர் ரவிசாம் முன்நிலை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்  கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறை பொறுப்பேற்ற 3 வது நாளில் திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைக்கு வட்டியில்ல கடனாக ரூ.200 கோடி கொடுத்ததால்தான்  இன்று தொழில் பனியன் சிறப்பாக இருக்கிறது என்று தொழில் துறையினரே  கூறுகின்றனர். இங்கே தொழிலை விட்டு விட்டு செல்லப்போவதில்லை என்று நீங்களே சொல்வதிலேயே  தமிழகம் தொழில் செய்வதற்கு சிறப்பாக உள்ளது என்று தெரிகிறது தொழில் துறையினர் நினைத்து பார்க்க வேண்டும், கர்நாடகா உள்ளிட்ட வேறு மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிருந்து தொழிற்சாலைகள் வேறு எங்கும் செல்லாத அளவுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பார்த்து உள்ளார்.தமிழகத்தில் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்; அதனால் தான் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. 
திருப்பூரை பொறுத்த வரை இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் தமது உழைப்பை கொடுத்து இம்மாநகரை முன்னேற்றி இருக்கிறீர்கள். அதற்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான பாதுகாப்பு வழங்குகிறது. அந்த அளவுக்கு சட்டத்தின் ஆ ட்சி நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. உங்களுக்கு என்ன தேவையோ அதை ஜெயலலிதா செய்கிறார். உங்கள் தேவை என்ன என்று கேட்பதற்காக தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஜெயலலிதா   வழிகாட்டுதலுடன் திருப்பூரில் கடந்த ஒரு மாதம் முன்பே  மகளிர் விடுதி  கட்ட ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. திருப்பூரில் ஆய்வு மையம் அமைக்க ஜெயலலிதா கூறி நடவடிக்கை எடுக்கபடும்.
உங்களுடைய பிரச்சினை எது என்றாலும் அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தொழில் செய்ய வருபவர்களுக்கு ஆட்சியாளர்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது.தொழிலையும் பாதுகாக்க வேண்டும்; அதே சமயம் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிரது. உங்களுக்கு தேவையான தொழிலாளர்களுக்கான பயிற்சி மையம் கேட்டிருக்கிறீர்கள் அதையும் ஏற்பாடு செய்ய மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தொழில் முனைவோர் முதலீடுகள் செய்வதற்கு வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழகத்தையே தேர்வு செய்திட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மே மாதம் நடத்த உள்ள தொழில்துறை மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் அதிகளவில் பங்கேற்று ரூ.10,ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திலேயே முதலீடு செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். 
தென் தமிழகத்தில் தொழில் துவங்கினால் நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் குறைத்து ஜெயலலிதா அறிவித்துள்ளார். அப்பகுதியில் தொழில் துவங்க அரசு உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும். சி பாரம் பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறையில் தெரிவித்து, தீர்வு காணப்படும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டும் தான் நல்ல சலுகைகளும், பாதுகாப்பும் கிடைக்கிறது. மக்கள் முதல்வரின் அரசு தொழிலுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் 
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில், மிகப்பேரிய அளவில் இந்தியாவிலேயே பின்னாலாடையில் சிறந்து விளங்குகிறது.  நீட்ஸ் என்கிற திட்டத்தை மக்கள் முதல்வர் ஜெயலலிதா தீட்டி, அத்திட்டத்தில் ஜெயலலிதா  50 சதவீதத்தை தர செய்தவர். மகளிருக்கென சேலம், சென்னையில் தொழிற்பேட்டையை அமைத்து தந்த இந்த அரசு அவரது வழிகாட்டுதலின் பேரில் . இன்றைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது. 18 ஆயிரம் கோடி வர்த்தகம், 20 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கிறது. உலகளவில் 4 சதவீத அளவில் இம்மாநகர் ஏற்றுமதி செய்கிறது. 
தமிழ்நாடு அரசால் இந்த துறை மூலம்  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு ஒற்றை சாளர தேர்வு பணிகள் இணைய தளம் மூலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை அம்மாவின் அரசு ஆய்ந்து தீர்த்து வைக்கும்.சாலை வசதிகள், தொழிற்பேட்டைகள் கேட்டுள்ளனர். ஏற்கனவே 2 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின் படி ராசாத்தா வலசில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 20 பேர் சேர்ந்து தொழில் நடத்த முனைந்தால் அதற்காக ரூ.0 கோடி வழங்க அரசு தயாராக இருக்கிறது. திருப்பூர்   மாவட்டத்தில் மட்டும் மக்களின் முதல்வர் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் திட்டம் மூலம் 15.62 கோடி ரூபாய் மானியமாக வழங்கி இருக்கிரார். வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு மானியமாக 9.3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் நலனுக்காக ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது ஆட்சி பொறுப்பேற்றவுடன்  தி.மு.க.ஆட்சியில் கைவிடப்பட்ட சாய சலவை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என கூறினார். அவருக்கு ஆதரவளித்து பெரும்பான்மையான வெற்றியை பெற்று தந்த திருப்பூர் வாழ் மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற 3 நாட்களில் மக்கள் முதல்வர்  அதற்கான நடவடிக்கை எடுத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து  சாயா, சலவை பிரச்சனை குறித்த அறிக்கை கேட்டு, தீர்வு காண ஆணையிட்டார். சாயப்பட்டறை அதிபர்களை அழைத்து பேசி, தொழிலையும் காப்பாற்ற வேண்டும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து , வட்டியில்லா கடனாக ரூ.200 கோடி யை அள்ளி கொடுத்து  திருப்பூரின் தொழிலை காப்பாற்றிய மாபெரும் முதல்வர் ஜெயலலிதா. இதன் காரணமாக இந்த தொழில் இன்று நல்ல நிலைக்கு வந்து உள்ளது. இன்றைக்கு எல்லா இடத்திலும் தொழில் நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். எனவே என்றைக்கும் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தரும் அவரை என்றும் நீங்கள் மறந்து விட கூடாது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, இன்றைக்கு திருப்பூர் மாநகர் அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தருகிறது. உங்களுக்கு கவலையே இருக்க கூடாது என்று தான் மக்ல்கின் முதல்வர் ஜெயலலிதா மின் பற்றாக்குறை தீர்க்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததார். இங்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.87 கோடிக்கு சாலை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் முதல்வர் ஜெயலலிதா  அரசு பின்னலாடை தொழில் வளர தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், விஜயகுமார், பட்டுலிங்கம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, சி.ஐ.ஐ., தலைவர் ராஜா சண்முகம், மாநில தலைவர் ரவிசாம், துணை தலைவர் மைகோ வேலுசாமி, ஸ்ரீதரன், கே.பி.ஜி. கோவிந்தசாமி, வைகிங் ஈஸ்வரன், டீமா முத்துரத்தினம், விஜயகுமார், டெக்பா ஸ்ரீகாந்த்,ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.


Dec 4, 2014

திருப்பூர் பள்ளியில் சமையற் அறையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு கவிதா லட்சுமி நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி சமையலறை மற்றும் தண்ணீர் தொட்டிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் கவிதா லட்சுமி நகர், 15வேலம்பாளையம் நகராட்சியாக செயல்பட்டபோது பெரியார் காலனியில் உள்ள துவக்கப்பள்ளியில் இருந்து கடந்த 2003ம் ஆண்டு பிரித்து சாதாரண ஓலை குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி வேலம்பாளையம் நகராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் 6வது வார்டாக மாற்றப்பட்டு கடந்த 2010-11ம் ஆண்டு கட்டிடமாக கட்டப்பட்டது. இதில் 16 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்களுடன் 115 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்.. 
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் சுகாதார வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன சத்துணவு கூடம் அமைக்க உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த பள்ளிக்கூடம் கடந்த 3 ஆண்டில் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சுகாதரமான முறையில் சத்துணவுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக அணைத்து வசதிகளும் இந்த பள்ளியில் அமைக்கப்பட்டு இப்பள்ளி திகழ்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் முதன்மையாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பள்ளிக்கு மெருகூட்டும்  வகையில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து நவீன சமையல் அறை கட்டுவதற்கு ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிந்துரை செய்தார். மேலும் தரை மட்ட தண்ணீர் தொட்டி கட்ட மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டது. 
இந்த இரு பணிகளும் முடிக்கப்பட்டு இதன் திறப்பு விழா பள்ளியில் நடைபெற்றது.புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் வி. ராதாகிருஷ்ணன், ஜெ.ஜான்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் வி.கே.பி.மணி மற்றும் எம்.மணி, நகர சீரமைப்பு குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் சத்யா, கல்பனா, ஈஸ்வரன், திலகர்நகர் சுப்பு, சின்னசாமி,செந்தில்குமார், மற்றும் அண்ணா தி,மு,க,நிர்வாகிகள்  ஈஸ்வரன், ஸ்டீபன்ராஜ்,  டி.டி.பி.தேவராஜ், ஏ.எஸ்.கண்ணன், வி.எம்.கோகுல், நீதிராஜன்,மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரவி, மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா, உதவி பொறியாளர், அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கற்பகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



ரூ.11.09 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்.

பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11.06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் தெற்கு அவினாசிபாளையம், பொங்கலூர், மாதப்பூர் ஆகிய 3 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையால் இயங்கி வந்த  இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள்  அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அவரதுவழிகாட்டுதலின் பேரில், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ரூ.11.06 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 



விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாமன்ற கவுன்சிலர் எம்.கண்ணப்பன், மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் எம்.மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், தண்ணீர் பந்தல் ப.நடராஜ் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், உகாயனூர் பழனிசாமி, திருப்பூர் கால்நடைத்துறை துணை இயக்குனர் டாக்டர்.சண்முகவேல், உதவி இயக்குனர்கள்  டாக்டர்கள் ராமச்சந்திரன், பிரபாகரன்,கால்நடை உதவி மருத்துவர் ஜெகநாதன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புத்தரச்சல் பாபு, சித்துராஜ், வி.எம்.கோகுல் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நீதிராஜன், அர்ஜுனன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dec 1, 2014

கால் நடை மருந்தகத்தை அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்.

திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை  வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து உணவை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, பல்லடம்  கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட  ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,துணைத்தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் ப.நடராஜன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பொங்கலூர் ஒன்றிய குழுத்தலைவர் சிவாச்சலம், கரைப்புதூர் நடராஜ், உகயனூர் பழனிசசாமி, லோகநாதன், புத்தரச்சல் பாபு,  ராஜேஷ் கண்ணா, கோகுல், ராஜ்குமார், கால்நடை துறை இணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குனர் ராமச்சந்திரன், டாக்டர் சங்கரநாராயணன், மக்கள் தொடர்பு அலுவளர் தமிழ் மொழி அமுது ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்

திருப்பூர் ஸ்ரீ வீரரகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், மேயர் விசாலாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
800 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த இக்கோயிலுக்கு15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை ஸ்ரீவீரராகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ராமன் பட்டர் தலைமையில், பட்டாச்சாரியார்கள் பூஜை, பாராயணங்கள் செய்தனர். யாக சாலை பிரவேசம், கும்பங்களில் எம்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜைகள் நடைபெற்றன.7 மணிக்கு சதுஸ்தான பூஜைகள், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.22க்கு, மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகமும்  நடைபெற்றது.தொடர்ந்து  வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மூலவர்களுக்கு ப்ராணப்திஷ்டை, மஹா தீபாராதனைகளும் நடைபெற்றன..கும்பாபிஷேகத்தை ஸ்ரீரங்கம் க.ஸ்ரீராமன்பட்டாச்சார்யார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன், மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மாநகர மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், எம்.கண்ணப்பன் (45வது வார்டு ) உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, எம்.மணி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், எஸ்பி.என்.பழனிச்சாமி, திருமுருகன்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து  சிறப்பு மஹா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலை 6.30 மணிக்கு வாழும் கலைபயிற்சி பெங்களூர் டாக்டர்.அருண்மாதவனின் இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நாகை முகுந்தனின் தெய்வீக சொற்பொழிவு நடைபெற்றது.
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர்களும், மாநகர காவல்துறையும் செய்திருந்தனர். மாநகர ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தலைமையில் உதவி ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சுந்தரவடிவேல் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.கோயில் பகுதிகளிலும், சுற்றுப்பகுதிகளிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.பழைய பஸ் நிலையம் வரும் ஒரு சில பேருந்துகள் இடம் மாற்றியமைத்து பக்தர்களுக்கு வசதி செய்து இருந்தனர்.
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது  சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்ட மஹா சிறப்பு அன்னதானம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர்  விழா கமிட்டி நிர்வாகிகள் டாக்டர் எஸ்,தங்கவேல், கிளாசிக் போலோ டி.ஆர்.சிவராம், கிரீட்டிங்ஸ் வி.ராஜேந்திரன், சௌமீஸ் எக்ஸ்போர்ட் எம்.முத்து நடராஜன், திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட்  கே.பி.ஜி.பலராமன், செல் எக்ஸ்போர்ட் தம்பு (எ) சி.ஆர்.ராஜேந்திரன், உஷா எம்.எம்.ரவிக்குமார் மற்றும், ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகரம் விழா கோலம் பூண்டிருந்தது.


வருகின்ற 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் தமிழ்நாட்டில் முதலிடம் பெரும் வகையில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., பொங்கலூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் அவினாசிபாளையத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் .எஸ்.சிவாச்சலம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டம் கட்சி ரீதியாக 3 அமைப்புகளாக செயல்பட்டு வந்தது. இதுவரை புறநகர் மாவட்டத்தில் இருந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க.இயக்கம் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றியை தந்துள்ளது. 
அந்த வகையில் வருகின்ற காலத்தில், பல்லடம் தொகுதி இணைக்கப்பட்டுள்ள  மாநகர் மாவட்ட கழகம் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும்; நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
 திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் எக்கு கோட்டையாக உள்ளது. மாநில அளவில் கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக அளவில்  முதல் இடத்திலும், பல்லடம் தொகுதி இரண்டாவது இடத்திலுமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இனிமேலும் நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் வருகிற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்ளின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது முதல் எம்.எல்.ஏ.வாக அண்ணா தி.மு.க.இயக்கம் உறுப்பினர்தான் வெற்றி பெற்றார். இப்பகுதிகளில் பல்வேறு வெற்றிகள் நம் இயக்க தொண்டர்களால் பெற்று இருக்கிறோம்.எனவே,வருகிற காலத்திலும் மாநகர் மாவட்டத்துடன் இணைந்து வெற்றிகளை பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில்  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், .ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, கரைபுதூர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, ஸ்டீபன் ராஜ், தொகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் பொங்கலூர் ஒன்றியம்,  திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூரில் நடந்த மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்

திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் அடுத்துள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில்



திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அண்ணா திமு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்க சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது மாவட்டபேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  அரசு கேபிள் டி,வி, நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ஒன்றிய பேரவை செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி மயில்சாமி, உடுமலை நகரமன்ற துணைதலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருப்பூர் அ.தி.மு.க.சார்பில் பெருமாள் கோவிலுக்கு ரூ.5 லட்சம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நன்கொடையாக ரூ.5 லட்சத்து ஆயிரத்தை மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.
இதில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும், துணை மேயருமான குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், சோமசுந்தரம், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், சவுமீஸ் நடராசன், பலராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.