Nov 1, 2014

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்











மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் மற்றும் ஆத்திகுளம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் பணி மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பணியை, மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:–
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளும் நோய் தடுப்பு சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலை உள்ள காரணத்தினால் தடுப்பு பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்ற முறை டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில் இம்முகாம் நடத்தப்படும். அதனடிப்படையில் வார்டு எண்.7 செல்லூர் மற்றும் வார்டு எண்.48 ஆத்திகுளம் ஆகிய வார்டுகளில் பொது மக்கள் நெருக்கமாக உள்ளதால் மதுரை மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார பணியாளர்கள் ஆசிரியர் கள் சுயஉதவி குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என 550 பேர் வார்டுக்கு 10 குழுக்கள் வீதம் 20 குழுக்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு வீடுகளுக்கு உட்புறம் மற்றும் வெளிபுறப்பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்குரிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், நிலவேம்பு பொடி வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்பணி இப்பகுதிகளில் இன்றும் நாளையும் மேற் கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக முழு கவனம் செலுத்தி ஒழிப்புபணி மேற்கொள்ளப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 2012 ஆம் ஆண்டு 857 நபர்களுக்கும், 2013 ஆம் ஆண்டு 57 நபர்களுக்கும், காணப்பட்டது.
தற்போது 2014 ஆம் ஆண்டு 14 நபர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளது டெங்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடாந்து நடைபெறும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிலவேம்பு பொடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஆணையாளர் கதிரவன், துணை மேயர் திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையாளர்கள் குணாளன், தேவதாஸ், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற உறுப்பினர் முத்துராஜா, சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், செவிலியர்கள், அபேட் மருந்து ஊற்றும் பணி யாளர்கள் மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையானதற்கு நேர்த்திக்கடன் செலுத்தியும்





மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கருவம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மற்றும் அக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், தண்ணீர் ஊற்று விநாயகர், முருகன்,சிவன்,கன்னிமார்,துர்கையம்மன்,நவக்கிரகம்,துவாரபாலகர் ஆகிய கோவில்களில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைக்கு  துணை மேயர் சு.குணசேகரன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எம்.மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், நிலைக்குழு தலைவர் பூலுவபட்டி பாலு, கருணாகரன்,சாகுல்அமீது, ராஜேஷ்கண்ணா, மாரிமுத்து, மயில்ராஜ், பி.பார்த்திபன், கவுன்சிலர்கள்  சண்முகசுந்தரம், கணேஷ் மற்றும் கோகுல், யுவராஜ் சரவணன், சடையப்பன்,பிரிண்டிங் மணி,பொன்.மருது, நீதிராஜன், முன்னாள் கவுன்சிலர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோமதி சம்பத், பஸ் ஸ்டாண்ட் சந்திரன்,ஆண்டிபாளையம் செல்வராஜ், சுபாஷ் மற்றும் மகளிர் அணியினர்கள்ஆகியோர் உள்பட பாலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகிகள் மைடி பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தசாமி,சி.டி.சி.பொன்னுசாமி,கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், உதவி குருக்கள் வெங்கடேஷ்,ரகுநாதன் ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோர்களை  வரவேற்றனர்.பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூரை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 1012 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார்



திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Oct 31, 2014

வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினா

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பணி குறித்த அனைத்துததுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் மழைக்காலம் தொடரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்..
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது தொடர்பாக வெள்ளம் ஏற்பட்டன. கடந்த 2013ம் ஆண்டு மாவட்டத்தில் 303 மி.மீ,. மட்டுமே; ஆனால் இந்த ஆண்டு 28.10.2014 வரை 650 மி.மீ.,  பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை  விட இருமடங்காகும். மேலும் மழைப்பொழிவு இன்னும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக காங்கயம்-தாராபுரம் ரோட்டில் முதலிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. இப்பாலம் நெடுஞ்சாலை  துறை மூலமாக சரி செய்யப்பட்டுள்ளது.கடந்த 1-ந்தேதி முதல் 25.10.2014 வரை மழையால்  சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 2500 வீதம் 15 ஆயிரம்  ரூபாயும்,முழுவதுமாக சேதமடைந்த 8 குடிசைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 55 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம்  அருகில் உள்ள அலங்கியம் காந்திநகரில் வசிக்கும் நாசுவம்புளியன் மகன் சுஜித் (வயது 12) என்பவர் கடந்த 27 -ந்தேதி அப்பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இறந்தார். மேலும் அவினாசி, ராயம்பாளையம் வடிவேல் மகன் உதயகுமார் என்கிற மணிகண்டன் (வயது 10) ஓடைப்புரம்போக்கில் தேங்கி இருந்த மழை நீரில் கடந்த 28-ந்தேதி மூழ்கி இறந்தார். மழை நீரில் மூழ்கி இறந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவியாக தலா ரூ.1.50 லட்சம் என ரூ.3 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.. ஆனந்தன் வழங்கினார். அப்போது திருப்பூர் கலெக்டர் .ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், திருப்பூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜன், துணை மேயர் சு.குணசேகரன், அவினாசி பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், மாமன்ற உறுப்பினர்கள் எம்.கண்ணப்பன்  சண்முகசுந்தரம்,தாசில்தார்கள் சைபுதீன், கண்ணன்,மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேள் நன்றி தெரிவித்தார்.