Oct 24, 2014

உடுமலைப்பேட்டை நகர்மன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமையில் ஜெயலிதா விடுதலை பெற்றதையொட்டி ஆறுபடை முருகன் கோவில்களுக்கு 61 அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் யாத்திரையாக சென்று மொட்டை அடித்தும்,முடிகாணிக்கை செலுத்தியும்,தங்கரதம் இழுத்தனர்,


அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை பெற்றதை யொட்டியும், அவர்மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டியும்,  தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டபேரவை தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில், உடுமலைப்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான எம்.ண்ணாயிரம் தலைமையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் 61 பேர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க மனமுருகி வேண்டி உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பவுணர்மி பூஜை நடத்தி ஆறுபடை முருகன் கோவிலுக்கு யாத்திரையை தொடங்கினர்.
பின்னர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து,9 பேர் முடி காணிக்கை செலுத்தி பன்னீர் அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் கும்பகோணம் சுவாமிமலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து  9 பேர் முடி காணிக்கை செலுத்தி சிறப்பு சந்தன அபிஷேகம் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பால் பஞ்சாமிதம் அபிஷேகம் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தேனும்,தினைமாவும் அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை, பூஜைகள் நடத்தி 18 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் நடத்தியும், பிரார்த்தனை செய்து விபூதி அபிஷேகம் செய்து 10 பேர் முடி காணிக்கை செலுத்தி, தங்கரதம் இழுதனர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி தெண்டபாணி சுவாமி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தும்,சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தி 13 பேர் முடி காணிக்கை செலுத்தி மொட்டை அடித்து, தங்கரதம் இழுத்தனர். பின்னர் அவர்கள் உடுமலை மாரியம்ம்மன் கோவிலில் சென்று அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
இந்த அனைத்து நிகழ்சிகளிலும் உடுமலை நகர் மன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சற்குணசாமி உமா குப்புசாமி, பெயிண்டர் பாலு, ராஜேந்திரன், பி.டி.குமார், முத்துகுமார், முருகேசன், பாப்பாத்தி, மயிலாத்தாள், பஞ்சலிங்கம், வலசப்பன், சுந்தரம், டைலர் வேலுச்சாமி, தெண்டபாணி, செல்லம்மாள், சுலோக்சனா, செம்பியன், ராஜேந்திரன், மணிவண்ணன், வின்சென்ட், செல்வராஜ், செம்பே கவுண்டர், ரொட்டி என்கிற அலிபாவஷா, வேலுச்சாமி ஆசாரி, மாரியப்பன், சரஸ்வதி, ராதாகிருஷ்ணன், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி, வினோத்குமார், ராமசாமி ஆசாரி, கார்த்தீபன், முத்துராமன், சின்னு செட்டியார், ராஜகோபால், முத்துலட்சுமி, முருகேசன், பனியன் துரை என்கிற துரைசாமி, சென்னை டி.பரமசிவம், பஞ்சலிங்கம், ராமச்சந்திரன், ஜோதிடர் முருகசன், பொற்கொடி, ஆருமுகபாண்டியன், பண்ணைகிணறு கார்த்திகேயன், சுபாஸ் சந்திரபோஸ், சிதம்பர நாதன், நடராஜ், சண்முகம், கபிலன், சரஸ்வதி அம்மாள், செந்தில் மேஷன், ஆறுமுகம் (ஐ.ஓ.பி.), நாகராஜ், ஆருக்கும் (சமையல்), போடிபட்டி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரபட்ட பொய் வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுபட்ட பின்னர் இதே போல் ஆறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி, தங்கரதம் இழுப்பதாக நகராட்சி துணைத்தலைவர் எம்.ண்ணாயிரம் தெரிவித்தார்.

Oct 23, 2014

அம்மா மீண்டும் முதல்வராவார்.


சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர் அம்மா சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே... அவர்கள் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வது திண்ணம். 

பெற்ற தாய்க்கு மேலாக தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து, தமிழ் மக்களின் துயரங்களை துடைக்கும் புரட்சித்தலைவிக்கு கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்தனை செய்கிறது. 

Oct 17, 2014

எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில் கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது

Displaying CIT_9012.JPG
திருப்பூர் மாநகர் மாவட்டம், அண்ணா தி.மு.க.சார்பில், மாவட்ட கழக செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில்  கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிசாமி,துணை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர்  லதா சேகர், அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் மேயர் தலைமையில் இன்று நடந்த சிறப்பு வழிபாடு






திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டிபிச்சம்பாளையம் விநாயகர் கோட்டை மாரியம்மன், கன்னீமார், முருகன்-விநாயகர், கருப்பராயன் மற்றும் நவக்கிரக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி கணபதி ஹோமம் பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Oct 15, 2014

அக்டோபர் 17-இல் அதிமுக 43-ஆவது ஆண்டு தொடக்க விழா




அதிமுக தொடங்கப்பட்டு 42-ஆவது ஆண்டுகள் நிறைவடைந்து, 43-ஆவது ஆண்டு தொடங்குவதை ஒட்டி, அதற்கான நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வர் என்று அதிமுக தலைமை அலுவலகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Oct 14, 2014

திருப்பூரில் அண்ணா தி.மு.கவினர் தொடர்ந்து யாகம்









ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி  திருப்பூர் அண்ணா தி.மு.க.வினர் யாகம், 
60 அடி உயர வீர பத்திரகாளியம்மனுக்கு பாலாபிஷகம
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் பங்கேற்பு 


திருப்பூர்,அக்.14-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் 17-வது நாளாக தொடர்ந்து யாகங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை அண்ணா தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில்  மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் 66 விளக்கு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதாம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஆறுகோம்பை வீதியில் 25 வது வார்டு கிளை கழகம் சார்பில் 60 அடி உயர கொண்டத்து வீரப்பத்திரகாளியம்மன் சிலைக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம் செய்து,10,008 எலுமிச்சம் பழங்களாலான மாலை அணிவித்து மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் வழிபட்டனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி,  மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில் வரை பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர். அங்கு 
108 தேங்காய் உடைத்து ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில் சென்று மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவைச்செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் வரதராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன்  உள்ளிட்ட.நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ்,சதீஷ், மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன்,  வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,ஏ.கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கண்ணபிரான், ரகுநாதன்,சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்  கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி,சரவணன், ராஜேந்திரன், ரவிக்குமார், குணசேகரன், சிவகுமார்,வேலுசாமி, கணேஷ், முருகன், கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், குணசேகர்,  விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, பேபி தர்மலிங்கம், மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன்,  நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், பேபி பழனிசாமி, என்.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார், மதுரபாரதி உள்ளிட்டவர்களும் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தராம்பாள் கேசவன்,ரசூல்மும்தாஜ் உள்பட பலர் லந்து கொண்டனர்.

AIADMK 43rd Anniversary Day - Hq Arivippu - 14th Oct 2014


போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு











போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை

“உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துக் குரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, உழைப்பாளியை ஊக்குவிக்கும் வகையில், ஊதிய உயர்வு, போனஸ், கருணைத்தொகை, ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டுகளில் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியவர் ஜெயலலிதா.

போனஸ்

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கியதுபோல் 2013-2014-ம் ஆண்டிற்கும் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், இணையம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கருணைத்தொகை

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத்தொகை தற்போது வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், கூட்டுறவு தொடக்க சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத்தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக் காடு கருணைத்தொகை என 10 விழுக்காடு வழங்கப்படும்.

குடிநீர் வாரிய பணியாளர்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

3 லட்சம் பணியாளர்கள்

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும்.

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி புரிந்துவரும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Oct 13, 2014

திருப்பூரில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,.25 வது வார்டு கிளைக்கழகம் சார்பில் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழிகாட்டுதலின் பேரில் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில்,மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் பி.என்.ரோட்டில் உள்ள ராமையா காலனி ஆறுகொம்பை வீதியில் உள்ள ஸ்ரீ வீர பத்திரகாளியம்மன் கோவில் சாமிக்கு 1000 லிட்டர் பால் அபிஷோகம், 1008 எலுமிச்சை கனி மாலை அணிவித்தும்,புடவைசத்தியும், பூமாலை அணிவித்தும் உச்சிகால பூஜையும்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள், கொட்டுரவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன்.ஆகியோர் வேண்டுதலின்போது மனம் உருகியபடி  கண்ணீர் விட்டு ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க பிரார்தனை செய்தனர்.இதனை பார்த்த மற்ற நிர்வாகிகளும் கதறி அழுதது. அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.