Sep 30, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.

Displaying IMG_9710.JPG

Displaying IMG_9702.JPG

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.
நிகழ்ச்சியில்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  தம்பி மனோகரன்,நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,  கவுன்சிலர்கள்   கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, சண்முகசுந்தரம், விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி,   கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி,  ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் மறியல், கைவிரல் அறுப்பு, கடையடைப்பு

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர்.அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், ஸ்டீபன்ராஜ், உள்ளிட்டோர் பங்க்ஹெற்றனர்.

தீர்ப்பையடுத்து தனது கைவிரலை அறுத்து  தொண்டர்.

Displaying IMG_9681.JPG

Displaying IMG_9663.JPG

Displaying IMG_9648.JPG

ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்

தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.

அனுமதி மறுப்பு 

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.

ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் வருகை 

இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.

இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை என்று ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் அளித்துள்ள ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள ஜெயலலிதா ஜாமீன் கேட்டு பெங்களூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், "’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் 4 மனுக்கள் தாக்கல்

ஜெயலலிதா தரப்பில் மொத்தம்  4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த  தண்டனையை குறைக்க  வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில்,  நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நான்காவது மனுவில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா ஐகோர்ட்டு மீண்டும் நடத்தி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது ஜாமீன் மனு மீதான விசா ரணையை நாளை செவ் வாய்க்கிழமையே எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 29, 2014

இந்த போட்டாவையும் இணைத்து அனுப்ப வேண்டுகிறேன்.நன்றி!

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை  யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர்  தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா  ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரான், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடுமலை கிருஷ்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன்,  ரவிகுமார்,சிவகுமார், கணேஷ், முருகன், முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர், பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன்,  ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் தீக்கனல் விஜயகுமார், பரதிதிபிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் 

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில்

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில் 2வது நாளாக தொடர்கிறது

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில், உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று அதிமுகவினர் தொடங்கினர். முதல் நாளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இன்றைய போராட்டத்திற்கு அமைச்சர் பா. வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். அவரது தலைமையில் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஜெயலலிதா விடுதலையாகும் வரை தொடர் உண்ணாவிரதமாக இது நடைபெறும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.