எழுமலை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட
தண்டனையால் அதிர்ச்சியுற்ற, மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17,
தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நல திட்டங்கள்:மதுரை, எழுமலை
முருகன் மகள் நாகலட்சுமி, 17. அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டதால், மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று காலை, 9:45 மணிக்கு,
மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டின் முன் வந்தார்.அங்கு, 'லேப் - டாப், சைக்கிள்,
நோட்டு புத்தகம் கொடுத்த அம்மாவை, சிறையில் அடைச்சுட்டாங்களே...' எனக்
கூறியபடி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை, ஆபத்தான நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்து
வமனையில்
சேர்த்தனர். டி.எஸ்.பி., சரவணக்குமார் விசாரித்தார். நாகலட்சுமி
கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய முதல்வரை
சிறையில் அடைத்ததை, தாங்கிக் கொள்ள முடியாததால் தீக்குளித்தேன்,'' என்றார்.
எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரித்தார். பின் மேல் சிகிச்சைக்காக நாகலட்சுமி, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி
சாவு:விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர், தங்கவேலு மனைவி
அம்மணியம்மாள், 70; அ.தி.மு.க., உறுப்பினர். இவர், நேற்று முன்தினம் மாலை,
4:00 மணிக்கு, தன் வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெ.,
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்ததும், அதிர்ச்சியில்
மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
தொண்டர்
தீக்குளிப்பு: கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம், காலனி வாட்டர் டேங்க்
தெருவைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன், 52; தீவிர அ.தி.மு.க., விசுவாசியான
இவரது மனைவி லட்சுமி, அப்பகுதி, ஜெ., பேரவை கிளை பொருளாளராக உள்ளார்.நேற்று
முன்தினம், ஜெயலலிதா குறித்த செய்தியை அறிந்த பாலகிருஷ்ணன், மனமுடைந்த
நிலையில் காணப்பட்டார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, பாலகிருஷ்ணன் தன்
மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.