Sep 25, 2014

அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.









திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு  திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,   ரத்தினகுமார், பி.லோகநாதன் பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழா








திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணையதள சேவை கிராமங்களை சென்றடைய கேபிள் மூலம் சேவை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு










திருப்பூர், செப். 25-
திருப்பூர்   மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை  சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து  கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான  விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர்   கு.கோவிந்தராஜ்   தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன்   முன்னிலை வகித்தார்..  இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன்  சிறப்புரையாற்றினார்.
 வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது   அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது.    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.  அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள்.  இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும்.  எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும்.  மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள்.  விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள்.  இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்   பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா;  உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா  கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள்.  இதனால்  கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது.  3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர் 
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.)   வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர்   உடுமலை  கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்   கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர்   .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்)  .பழனிவேலன், மேலாளர்  (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன்,  கிளை மேலாளர் தனிவட்டாட்சியர்  எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர்  ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.

அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.







திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி கழக செயலாளர் பூண்டி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் ,செல்வராஜ், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி கழக செயலாளர் வேலுசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பூண்டி லதா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், கருவம்பாளையம் மணி, ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.














திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ,  அங்கேரிபாளையத்தில் நடந்தது. 
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார்,  தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர்  வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள்  சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

உள்ளாட்சி இடைத்தேர்தல் அ.இ .அ .தி .மு க .வெற்றி .







குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர்  திரு .c மாசிலாமணி  வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி  பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற  துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி  வாரியத்தலைவர் உடுமலை   ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்

Sep 24, 2014

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நிதி, வணிகவரித்துறை திட்டங்கள் பற்றி ஆலோசனை



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (23–ந் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிதித்துறை, வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் அதுபற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.

Sep 23, 2014

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை



வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1993-1994-ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று என் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், வருமான வரித்துறை உதவி கமிஷனர் கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அந்த கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு, அதற்குரிய அனைத்து வகை வரி, கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த தயாராக உள்ளதாக கூறி கடந்த ஜூன் 25-ந் தேதி வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில், கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, என்னுடைய கோரிக்கை மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என்று என் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதன்பின்னர் இந்த காலஅவகாசம் செப்டம்பர் 6-ந் தேதி வரை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளிவைக்க கூடாது’ என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவியல் விசாரணை முறை சட்டம் 313-ன் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக அக்டோபர் 1-ந் தேதி தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவு சட்டப்படி ஏற்கமுடியாதது. அதை ரத்து செய்யவேண்டும். வருமான வரித்துறை சட்டம் பிரிவு 279(2)-ன் படி, வருமான வரி கணக்கு செலுத்தாதபட்சத்தில், அதற்குரிய கட்டணத்துடன் அனைத்து தொகைகளையும் செலுத்தலாம். எனவே அவ்வாறு சமரச மனு தாக்கல் செய்து கட்டணம் செலுத்த எனக்கு உரிமை உள்ளது.

ஆனால், இவற்றை விசாரணை கோர்ட்டு நீதிபதி கவனிக்க தவறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கீழ் கோர்ட்டு நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.

ஆனால், வருமான வரித்துறைக்கு நான் கொடுத்துள்ள சமரச மனுவினால், இந்த வழக்கின் நிலை மாறி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவை கீழ்கோர்ட்டு நீதிபதி பரிசீலித்து இருக்கக்கூடாது. மேலும் என்னுடைய சமரச மனுவை, (மனு கொடுத்த நாளில் இருந்து) 180 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சட்டம் கூறுகிறது.

எனவே, இந்த சூழ்நிலையில், என்னை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது அரசியல் சட்டத்துக்கும், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது செயலாகும்.

எனவே, வருமான வரி வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 18-ந் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனுக்களை சசிகலாவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அம்மா உணவகத்தில் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: சென்னையில்முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள கஸ்தூர்பா மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது உணவகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை தட்டில் வைத்து ருசி பார்த்துச் சாப்பிட்டார். சரி.